சென்னை: வீடு கட்டுவது என்பது நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்று. தற்போதுள்ள விலைவாசி காரணமாக, சொந்த வீடு என்பது பலருக்கும் கனவாகத்தான இருக்கிறது. இந்த கனவை நிறைவேற்றுவதற்காகவும், வீட்டுத் தட்டுப்பாட்டை குறைப்பதற்காகவும் மத்திய அரசால் 2015-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டதுதான் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா (PMAY) திட்டம். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க யாரெல்லாம் தகுதி உடையவர்கள்? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? மற்றும் இதர விவரங்களை இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்றால் என்ன?: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் வீடுகளை வாங்க முடியும். அதாவது நீங்கள் பெரும் வீட்டுக் கடன்களுக்கு அரசு மானியங்களை வழங்கி வருகிறது. முன்பு இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட சில நபர்களால் மட்டுமே முடியும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது சொந்த தொழில் செய்பவர், கடை வைத்திருப்பவர் என யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட மக்கள், நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. PMAY திட்டம் மூலம், மலிவு விலையில் சுமார் 20 மில்லியன் வீடுகளைக் காட்டித் தருவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023ஆம் ஆண்டு பட்ஜெட்டில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கான செலவை 66% அதிகரித்து ரூ.79,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
1. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம் (PMAY-U)
2. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமப்புறம் (PMAY-G)
PMAY திட்டம் பிற திட்டங்களுடனும் சேர்ந்து வருகிறது.
ஸ்வச் பாரத் அபியான் (Swachh Bharat Abhiyan): திறந்த வெளியில் மலம் கழிப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, வீட்டிலேயே கழிப்பறைகள் மற்றும் பொது கழிப்பறைகளைக் கட்டுதல், தெருக்கள், சாலைகள் மற்றும் வீடுகளைச் சுற்றி தூய்மையைப் பராமரிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சௌபாக்யா யோஜனா: மின் இணைப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
உஜ்வாலா யோஜனா: LPG எரிவாயு இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா: பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்பது ஜீரோ பேலன்ஸ் கணக்கைத் திறப்பதையும், சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வங்கி வசதிகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் சிறப்பம்சங்கள்: இந்த திட்டத்தின் கீழ், வீட்டுக் கடனுக்கான வட்டித்தொகையில், கடன் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு அரசு 6.5% வட்டி மானியம் வழங்கும். இதன் மூலம், வீட்டுக் கடன் பெறுவது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும். வட்டி மானியம் ரூ.6 லட்சம் கடன் தொகைக்கு மட்டுமே பொருந்தும், அதற்கு மேற்பட்ட தொகைக்கு மானியம் கிடைக்காது. கடன் வழங்கும் நிறுவனங்கள் வட்டி மானியத்தை நேரடியாக பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைப்பார்கள். இதன் காரணமாக, EMI குறைந்து, வீட்டுக் கடனின் மொத்த தொகையும் குறையும்.
PMAY திட்டத்தின் பயனாளிகள்: குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள் (LIG), நடுத்தர வருமானக் குழுக்கள் (MIG) மற்றும் EWS உள்ளிட்ட பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் அனைவரும் இந்தத் திட்டத்தின் பயனாளிகளாகக் கருதப்படுகிறார்கள். EWS இன் ஆண்டு வருமான வரம்பு ரூ. 3 லட்சமாகவும், LIG-களின் வரம்பு ரூ. 3 முதல் ரூ. 6 லட்சமாகவும், MIG-களின் வரம்பு ரூ. 6 முதல் ரூ. 18 லட்சமாகவும் உள்ளது.
ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
1. ஆதார் அட்டை
2. மொபைல் நம்பர்
3. பேங்க் பாஸ்புக்
4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
5. தூய்மை இந்தியா இயக்கம்(Swachh Bharat Mission) பதிவு எண்
மேற்கண்ட ஆவணங்களையும் வைத்திருப்பவர்கள் ஆன்லைனில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (https://pmaymis.gov.in)சென்று விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications