பொதுவாக கிரெடிட் கார்டுகள் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்துதான் வழங்கப்படுகின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் எப்படி இருந்தாலும் உங்களுக்கு கிரெடிட் கார்டு கிடைக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? பிக்சட் டெபாசிட் செய்திருந்தால் அதற்கு எதிராக வழங்கப்படும் கிரெடிட் கார்டுகள் உள்ளன. மோசமான கிரெடிட் ஸ்கோர்களை கொண்ட நபர்களும் தங்கள் டெபாசிட்டை பினையமாக வைத்து கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இதைத்தான் செக்யூர்டு கிரெடிட் கார்டுகள் என்று கூறுகின்றனர். இந்தப் பதிவில் செக்யூர்டு கிரெடிட் கார்டுகள் என்றால் என்ன?, அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பார்ப்போம்.
செக்யூர்டு கிரெடிட் கார்டுகள் எப்படி வேலை செய்கிறது?: செக்யூர்டு கிரெடிட் கார்டுகள் வழக்கமான கிரெடிட் கார்டைப் போலவே செயல்படுகிறது. எந்த தொந்தரவும் இல்லாமல் இதை வைத்தும் நீங்கள் பணம் செலுத்தலாம். ஆனால் வங்கியில் நீங்கள் வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட் நிலுவைத் தொகையை பொறுத்து கிடைக்கக்கூடிய கடன் வரம்பு இருக்கும்.

அதாவது உங்கள் கிரெடிட் கார்டின் கடன் வரம்பு பிக்சட் டெபாசிட்டில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் தொகைக்கு சமமாக இருக்கும். இது கார்டுதாரர்கள் அதிகமாக செலவு செய்யாமல் இருப்பதை உறுதி செய்யவும். ஒருவேளை நீங்கள் கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால்.. அந்த பிக்சட் டெபாசிட்டின் பணம் எடுத்துக் கொள்ளப்படும்.
செக்யூர்டு கிரெடிட் கார்டுகள், தொழில் தொடங்கும் இளைஞர்கள் மற்றும் நிதிக் கஷ்டங்களில் இருந்து விடுபட முயற்சிப்பவர்கள் உட்பட பலருக்கும் உதவியாக இருக்கும். வருமான ஆதாரம் எதுவுமின்றி செக்யூர்டு கிரெடிட் கார்டைப் பெறலாம்.
செக்யூர்டு கிரெடிட் கார்டுகளினால் (Secured Credit Card) என்ன நன்மைகள்?: கிரெடிட் ஸ்கோர் இல்லாதவர்களுக்கும் செக்யூர்டு கிரெடிட் கார்டுகள் கிடைக்கும். பிணயத்தை வைத்து வாங்குவதால் ஆபத்து இல்லாத கடன்களாக வங்கிகள் நினைத்துக் கொண்டு உங்களுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்கிவிடும். ஆனால் அன் செக்யூர்டு கிரெடிட் கார்டுகள் (Unsecured Credit Card) பொதுவாக கிரெடிட் ஸ்கோரை மையமாக வைத்து வழங்கப்படும் கடன்களாகும்.
பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு செக்யூர்டு கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அதற்கு பெயரளவு கட்டணம் செலுத்த வேண்டும். சில வங்கிகள் வருடாந்திர கட்டணம் மற்றும் ஜாயினிங் கட்டண தள்ளுபடியுடனும் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. ரூ.10,000 பிக்சட் டெபாசிட் முதலீடு செய்பவர்களும் செக்யூர்டு கிரெடிட் கார்டுகளைப் பெறலாம்.
செக்யூர்டு கிரெடிட் கார்டின் தீமைகள் என்ன?: செக்யூர்டு கிரெடிட் கார்டுகள் சிறந்த பலன்களை வழங்கினாலும், இவை கிரெடிட் கார்டு உலகில் ஒரு சிறு புள்ளி மட்டுமே. அதாவது பல்வேறு வரம்புகளில் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகிறது. வழக்கமான பிற கார்டுகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த ரிவார்டுகள் மற்றும் கேஷ்பேக் மட்டுமே இதற்கு கிடைக்கிறது.
பிரபலமான சில செக்யூர்டு கிரெடிட் கார்டு:
1. எஸ்பிஐ உன்னதி கிரெடிட் கார்டு
2. ஆக்சிஸ் பேங்க் மை சோன் ஈஸி கிரெடிட் கார்டு
3. பேங்க் ஆஃப் பரோடா பிரைம் கிரெடிட் கார்டு
4. IDFC ஃபர்ஸ்ட் வாவ் கிரெடிட் கார்டு
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications