நீங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் நபரெனில் இந்த STT வரி பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள். நேற்று மக்களவையில் நிதி மசோதா குறித்த அறிவிப்புகளுக்கு மத்தியில் பங்குச் சந்தையில் Security transaction tax எனப்படும் வரியின் சதவீதத்தை 25% ஆக உயர்த்தியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த STT வரி குறித்த குழப்பங்களுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.
அதென்ன STT வரி!
பங்குச் சந்தையில் இந்த எஸ்டிடி வரியானது முதலீட்டாளர்கள் பங்குகளை Futures மற்றும் Options முறையில் வர்த்தகம் செய்து அப்பங்குகளை விற்கும்பொழுது இந்த வரியானது விதிக்கப்படும். இந்த வரியைத் தான் உயர்த்தியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
குறிப்பாக இது அரசாங்கத்தால் விதிக்கப்படும் வரி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எஸ்டிடி வரிகள்!
எஸ்டிடி வரிகள் 0.05% லிருந்து 0.062% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் 0.017% லிருந்து 0.021% ஆக இல்லை என்றும் நிதி அமைச்சகம் நேற்று மக்களவையில் விளக்கம் அளித்துள்ளது. அதேசமயம் Option traders களுக்கு ஏற்கனவே இதே வரி விகிதம் உள்ளதால் இந்த புதிய வரி குறித்து வர்த்தகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இது டைப்பிங் Error என்றும் மசோதாவில் உள்ள பிழைகளை திருத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
புதிய விதிகளின்படி வரித்தொகை மாற்றம்!
புதிய எஸ்டிடி விதிகளின்படி ஆப்சன் டிரேடர்கள் அவர்கள் ஓவ்வொரு முறையும் ரூ.1 கோடி மதிப்புள்ள பங்கு முதலீடுகளை விற்கும்பொழுது தற்போது செலுத்தப்பட்டு வரும் எஸ்டிடி வரியான ரூ.5000 க்கு எதிராக ரூ.6,200 வரியாக செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. அதாவது ஏற்கனவே இருந்த வரியைவிட 25% உயர்வாக செலுத்த வேண்டும்.
Futures டிரேடர்கள்
அதேசமயம் Futures டிரேடர்களுக்கான விற்பனை வரியை 0.01% லிருந்து 0.0125% ஆக உயர்த்தியுள்ளது. இதுவும் 25% உயர்வாகும். சுருக்கமாக கூறினால் வர்த்தகர்கள் futures இல் ரூ.1 கோடி மதிப்பிளவில் பங்குகளை விற்றால் அதற்கு ரூ.1,250 STT ஆக செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இவ்வரி யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்!
இந்த புதிய வரி Futures மற்றும் Options முறையில் வர்த்தகம் செய்பவர்களை மொத்தமாக பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் Options முறையில் தினமும் வர்த்தகம் செய்பவர்களுக்கு குறிப்பாக high frequency traders-க்கு இது பெரிய இழப்பை ஏற்படுத்தும் என மோதிலால் ஓஸ்வாலின் Derivatives & Technical Analyst ஆக இருக்கும் சந்தன் தபரியா தெரிவித்துள்ளார்.
Zerodha – இணை நிறுவனர் விளக்கம்!
இந்த STT உயர்வு குறித்து ஜிரோதாவின் இணை நிறுவனர் நிகில் காமத் கூறுகையில் Intraday இல் ரீடெயில் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர் நிஃப்டி futures இல் 10 லாட்களை வாங்கி விற்கிறார் என்றால் அவர் ஒவ்வொரு நிஃப்டி லாட்டிற்கு ரூ.855 செலுத்த வேண்டியிருக்கும் எனக் கூறியுள்ளார். இது அவர்களுக்கு ஒரு நஷ்டமாகவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதையும் மீறி யாராவது அதிக லாபத்தில் பங்குகளை விற்றாலும் அவர்கள் அதிகப்படியான வரியை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் எனவும் நிகில் காமத் கூறியுள்ளார்.
PHD சேம்பர் ஆஃப் காமர்ஸ்!
ஏற்கனவே பங்குச் சந்தையில் கடும் சரிவுகள் மற்றும் ஏற்ற, இறக்கங்கங்களால் முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய STT வரி விதிப்பு ஒரு கூடுதல் சுமையாகத்தான் இருக்கும் என PHD சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூறுகிறது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!



Click it and Unblock the Notifications