பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை தேடும் முதலீட்டாளர்களுக்கு சிறுசேமிப்பு திட்டங்கள் நல்ல தேர்வாக அமைகின்றன. இந்த சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் அவ்வப்போது மாற்றியமைக்கின்றன. குறிப்பாக சொல்லப்போனால் காலாண்டுக்கு ஒரு முறை சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்படும். அந்த வகையில் சில பிரபலமான முதலீட்டு திட்டங்களின் வட்டி விகிதங்கள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF): தற்போது PPF 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. PPF என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். குறைந்தபட்ச வருடாந்திர வைப்புத்தொகையாக ரூ. 500 முதல் PPF கணக்கைத் தொடங்கலாம் மற்றும் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். PPF திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகைகளைப் பெறலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS): தற்போது மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ. 1,000 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களுக்கு SCSS திட்டத்தின் நன்மைகள் கிடைக்கிறது. கூடுதலாக, 55 வயதிற்குப் பிறகு விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் (SSY): சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. SSY என்பது அரசு வழங்கும் சிறு சேமிப்பு திட்டமாகும். இது பெண் குழந்தைகளுக்காக முதலீடு செய்ய பெற்றோரை ஊக்குவிக்கும் திட்டமாக செயல்பட்டு வருகிறது.
SSY, திட்டத்திற்கு வரிச் சலுகைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. 10 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயரில் கணக்கை திறக்கலாம். குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக ரூ. 250 முதல், அதிகபட்ச டெபாசிட் தொகையாக ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
கிசான் விகாஸ் பத்ரா (KVP): கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. கிசான் விகாஸ் பத்ரா திட்டம் 1988-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு சான்றிதழ் திட்டமாகும்.
இது 115 மாதங்களில் உங்களுடைய முதலீட்டை இரட்டிப்பாக்குகிறது. அதாவது நீங்கள் ரூ.5,000 டெபாசிட் செய்தால், முதிர்ச்சியடைந்த பிறகு ரூ.10,000 கிடைக்கும். குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையாக ரூ.1,000 முதல் KVP கணக்கைத் தொடங்கலாம்.
இந்தத் திட்டத்திற்கு அதிகபட்ச வரம்பு இல்லை. இன்று உங்களிடம் இருக்கும் தொகையை முதலீடு செய்கிறீர்கள் என்றால் 115 மாதங்களில் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும். நீண்ட காலத்திற்கு விவசாயிகள் சேமிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்கிறது. சில பொதுத்துறை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் KVP சான்றிதழ்களை வாங்கலாம்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC): இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. NSC கணக்கை நீங்கள் எந்த தபால் அலுவலக கிளையிலும் திறக்கலாம். முக்கியமாக சிறிய மற்றும் நடுத்தர வருமான முதலீட்டாளர்களை முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . NSC திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக ரூ. 1,000 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இந்தத் திட்டத்திற்கு கிடையாது. வட்டி முதிர்ச்சியின் போது செலுத்தப்படும்.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS): இந்தத் திட்டத்திற்கு தற்போது 7.4 சதவீத ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. POMIS திட்டம் என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் சிறு சேமிப்புத் திட்டமாகும். POMIS திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ. 1,000 முதல் டெபொசிட் செய்யலாம். மேலும் அதிகபட்ச வரம்பு ஒரு கணக்கிற்கு ரூ.9 லட்சமும் கூட்டுக் கணக்குகளுக்கு ரூ.15 லட்சம் ஆகும்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்: இந்தத் திட்டம் ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்குக்குகிறது. மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்பது 2023-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அரசாங்கம் அறிவித்த பெண்களுக்கான ஒரு சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டம் ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2025 வரை செல்லுபடியாகும் மற்றும் முதலீட்டில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிலையான வட்டி விகிதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பெண்கள் அல்லது சிறுமிகளின் பெயரில் அதிகபட்சமாக ரூ 2,00,000 வரை டெபாசிட் செய்யலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications