சென்னை: குறுகிய கால பிக்சட் டெபாசிட்கள் (FDs) பல நன்மைகளை வழங்குகிறது. இந்த FDகள், பொதுவாக ஒரு வருடத்திற்கும் குறைவான லாகின் காலத்துடன் இருப்பதால், முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானம் ஈட்ட நல்ல வழிகளை வழங்குகிறது. இந்தப் பதிவில் வங்கிகள் தற்போது குறுகிய கால பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.
குறுகிய கால பிக்சட் டெபாசிட்கள், உங்களுக்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன. நீங்கள் முதலீடு செய்யும் போதே உங்களுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும். எனவே, நீங்கள் எவ்வளவு தொகையை, முதிர்வு காலம் முடிந்து பெறுவீர்கள் என்பதை தெரிந்து கொண்டு முதலீடு செய்ய முடியும். குறிப்பாக பொருளாதாரம் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்கள் நிச்சயமற்றதாக இருக்கும் சூழ்நிலையில் இந்த வகை முதலீடுகள் முதலீடாளர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

குறுகிய கால பிக்சட் டெபாசிட்களைப் பல நிதி நிறுவனங்கள் மற்றும் பேங்குகள் வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு ஒவ்வொரு நிறுவனமும் உங்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்கலாம். எனவே அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஆராய்ந்து உங்கள் வருவாயை அதிகரிக்கும் நிறுவனங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம்.
இந்த வகை பிக்சட் டெபாசிட்களின் இன்னொரு நன்மை என்னவென்றால் இதற்கான கணக்கைத் திறப்பது மிகவும் எளிமையான செயல்முறையாகும். குறைந்தபட்ச ஆவணங்களே தேவைப்படும் இதற்கு, நீங்கள் வங்கிகளுக்கோ அல்லது நிதி நிறுவனங்களுக்கோ நேரடியாக செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொதுவாக ஆன்லைன் மூலமாகவே நீங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இது அனுபவமுள்ள முதலீட்டாளர்களுக்கும் மற்றும் புதிய முதலீட்டாளர்களுக்கும் வசதியாக இருக்கும்.
மற்ற முதலீடுகளில் ஒப்பிடும்போது இந்த குறுகிய கால பிக்சட் டெபாசிட்கள், அதிக வருமானத்தைப் பெற உதவியாக இருக்கும்.
பேங்க் ஆப் பரோடா ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 5.60 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. பேங்க் ஆப் இந்தியா 5.5 சதவீதம் முதல் 5.75 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்குகிறது. கனரா பேங்க் 6.15 சதவீதம் முதல் 6.25 சதவீதம் வரை வட்டியை வழங்குகிறது. பேங்க் ஆப் மகாராஷ்டிரா 5.10 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 6.6 சதவீதம் முதல் 6.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்தியன் பேங்க் குறுகிய கால பிக்சட் டெபாசிட்களுக்கு 3.85 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் 5.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க் 6 சதவீதம் முதல் 7.5 வரை வட்டி வழங்குகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 5.75 சதவீதம் முதல் 6 சதவீதம் வட்டி வழங்குகிறது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா 4.90 முதல் 5.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. ஆக்ஸிஸ் பேங்க் 5.75 முதல் 6 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. பந்தன் பேங்க் 4.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
சிட்டி யூனியன் பேங்க் 6 சதவீதம் முதல் 6.5 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. ஹெச்டிஎஃப்சி பேங்க் 4.5 முதல் 6 சதவீதம் வட்டியை அளிக்கிறது. கோடக் மகேந்திரா பேங்க் 6 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையிலான வட்டியை அளிக்கிறது. ஐசிஐசிஐ பேங்க் 4.75 முதல் 6 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. ஹெச்டிஎஃப்சி பேங்க் 4.5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
மேற்கண்ட வட்டி விகிதங்கள் 6 முதல் 1 வருடத்திற்கான குறுகிய கால பிக்சட் டெபாசிட்களுக்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் ஆகும். இது அவ்வப்போது மாறுபடலாம். எனவே உண்மையான வட்டி விகிதங்களை தெரிந்து கொள்ள அருகில் உள்ள வங்கிக் கிளைகளை அணுகவும்.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications