தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே இருக்கக் கூடிய சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தொடங்கிவிட்டன. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்டவை நடைபெற்று வரக்கூடிய அதே வேளையில் வாக்காளர்களை கவர்வதற்காக கட்சிகள் சார்பாக வாக்குறுதிகள் வெளியிடப்பட்ட வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 462 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு துறைக்கும் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் அது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாம் தமிழர் கட்சி இந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இதன்படி நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைத்தால் திருச்சி, சென்னை, கோவை ,மதுரை, கன்னியாகுமரி என ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும் என சீமான் அறிவித்திருக்கிறார். சென்னை தொழில்நுட்ப தலைநகரமாக செயல்படும் , கோயமுத்தூர் தொழில் மற்றும் வணிக தலைநகரமாக செயல்படும் என்றும் கூறியிருக்கிறார். திருச்சி நிர்வாக தலைநகரமாக இருக்கும் என்றும் தலைமை செயலகம் தொடங்கி முதலமைச்சர் அலுவலகம் வரை திருச்சிக்கு மாறும் என கூறியிருக்கிறார்.
அதே போல மதுரை மொழி கலை மற்றும் பண்பாட்டு துறைக்கான தலைநகரமாக செயல்படும் என கூறியிருக்கிறார் தமிழர் மெய்யியல் தலைநகரமாக கன்னியாகுமரி இருக்கும் என தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார். இது தவிர தமிழ்நாட்டில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பெண்களுக்கு என தனி தொகுதிகள் போராடி பெறப்படும் என குறிப்பிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய மதுக்கடைகள் ஓராண்டுக்குள் படிப்படியாக மூடப்படும் என அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டை அழித்து தமிழ் குடிமக்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறி இருக்கும் , அவர் மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என வாக்குறுதி தந்துள்ளார். தேர்தலில் வாக்களிப்பது கட்டாயம் ஆக்கப்படும் என்றும் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் உறுதி தந்துள்ளார்.

ஆற்று நீரை பயன்படுத்தக்கூடிய குளிர்பான ஆலைகளுக்கு தடை விதிக்கப்படும் என கூறியிருக்கிறார். அதே போல தமிழ்நாட்டில் குடிநீர் விற்பனை தடுக்கப்பட்டு அனைவருக்கும் இலவச குடிநீர் என்ற நிலைமை கொண்டுவரப்படும் என கூறி இருக்கிறார். வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய அனைத்து தமிழ் மக்களும் அஞ்சல் வழியில் வாக்களிக்க உரிமை பெற்றுத் தரப்படும் என கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் புதிய ஏரிகள், கண்மாய்கள் உருவாக்கப்படும் என்றும் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கக்கூடிய நீர்நிலைகள் மேம்படுத்தப்படும் என்றும் மணல் கொள்ளை தடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஆடு , மாடுகளை வளர்ப்பது அரசு பணியாக மாற்றப்படும் எனக் கூறியிருக்கிறார். படித்தவர் , படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை, இனி படிக்காதவரே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே நாம் தமிழர் கட்சியின் இலக்கு என தெரிவித்திருக்கிறார்.
அனைத்து மக்களுக்கும் தரமான, சமமான கட்டணமில்லா மருத்துவம் வழங்குவதே தன்னுடைய அரசின் கடமையாக இருக்கும் என சுட்டிக்காட்டி இருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும் என குறிப்பிட்டு இருக்கிறார். அரசின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சரிபாதி வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ள அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி அமைச்சகம் மற்றும் தனி அமைச்சர் உருவாக்கப்படுவது உறுதி என்றும் தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டிலும் 5% மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
அரசு ஊழியர்களே மக்கள் வீடு தேடி வந்து சேவைகளை வழங்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படும் என தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் முதலமைச்சர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் ,அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் மற்றும் அரசு ஊழியர்களின் பிள்ளைகள் என அனைவருமே அரசு பள்ளியில் தான் கல்வி கற்க வேண்டும் என்பது அடிப்படை சட்டமாக மாற்றப்படும், தமிழ் படித்தால் தான் தமிழ்நாட்டில் வேலை என்ற நிலையை நாம் தமிழர் அரசு கொண்டு வரும் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடக்கும் வாக்குபதிவு!! வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ!!

ரேஷன் கார்டு: தேர்தல் நடத்தை விதிகளுக்கு மத்தியில் வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஸ்டாலின் Vs ஈபிஎஸ் Vs விஜய் Vs சீமான்: பெண்களுக்காக இவர்கள் முன் வைக்கும் வாக்குறுதிகள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications