சென்னை: இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Association) மற்றும் இந்திய அரசுக்கு இடையேயான வழக்கின் தீர்ப்பின் விளைவாக, அனைத்து விளம்பரதாரர்களும், விளம்பர நிறுவனங்களும் விளம்பரத்தை வெளியிடுவதற்கு முன்பு செல்ஃப் டிக்ளரேஷன் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய விளம்பர துறையை இந்த உத்தரவு கடுமையாக பாதிக்கும் என சந்தை வல்லுனர்கள் கூறிவரும் வேளையில், இந்த உத்தரவை செயல்படுத்துவதை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்று இந்திய விளம்பரதாரர் சங்கம் (Indian Society of Advertisers - ISA) மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

உச்ச நீதிமன்றம், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கேட்டறிந்து உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த செயல்பாட்டை நிறுத்த வேண்டும் எனவும் இந்திய விளம்பரதாரர் சங்கம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் (Ministry of Information and Broadcasting - MIB), ஜூன் 3ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், விளம்பரதாரர்கள் / விளம்பர நிறுவனங்கள் செல்ஃப் டிக்ளரேஷன் சான்றிதழை பதிவேற்றம் செய்வதற்காக ஒளிபரப்பு சேவை இணையதளம் / பத்திரிகை குழு இணையதளம் ( Broadcast Seva Portal/Press Council of India portal) ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
இதை தொடர்ந்து ஜூன் 5 ஆம் தேதி இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கான அறிவுறுத்தலையும் MIB வெளியிட்டது. இந்த அரிவிப்பில் ஜூலை 18 ஆம் தேதி முதல் அனைத்து தளங்களும், விளம்பரதாரர்களும், விளம்பரக் துறையினரும் இந்த விதியை கட்டாயத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த செல்ஃப் டிக்ளரேஷன் சான்றிதழ் செயல்முறை குறித்து இந்திய இணையதள மற்றும் மொபைல் சங்கம் (IAMAI), இந்திய பத்திரிகை சங்கம் (INS), மற்றும் இந்திய விளம்பரதாரர் சங்கம் (ISA) ஆகியவை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு (MIB) கடிதம் எழுதியுள்ளன. செயல்படுத்துவதற்கு முன்பு இதில் உள்ள பரிச்சனைகளை கவனித்து, பரிசீலித்து, தீர்வு காண வேண்டியது அவசியம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கவலைகள் என்ன?
செல்ஃப் டிக்ளரேஷன் சான்றிதழ் என்பது விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பரங்கள் உண்மையானவை மற்றும் தவறானவை இல்லை என்று உறுதி செய்வதாகும். இருப்பினும், தவறான விளம்பரங்கள் தொடர்பான புகார்கள் எழும்போது, சட்டப் பொறுப்பு யாரை சேரும் என்பது குறித்து குழப்பம் இன்னும் நிலவுகிறது.
விளம்பரங்களின் செல்ஃப் டிக்ளரேஷன் ஒப்புதலுக்கான நேரக் கட்டுப்பாடு குறித்து இதுவரை எந்த தெளிவான தகவலும் இல்லை. இது விளம்பர வர்த்தகத்தை கட்டாயம் பாதிக்கும்.
சில வகையான விளம்பரங்களுக்கு தேவையான ஆதாரங்களைச் சேகரிப்பதில் சிக்கல்கள் இருக்கலாம். உதாரணமாக, ஒரு அழகு சாதனப் பொருள் "பளபளப்பான சருமம்" தருவதாகக் கூறுகிறது என்றால், இதற்கான அறிவியல் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். இது நடைமுறையில் சாத்தியமா?
இந்த விவகாரத்தில் இறுதி முடிவு என்ன என்பதை அறிய அனைத்து தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவுக்காக காத்திருக்கின்றனர். மேலும் இத்தகைய தவறான விளம்பரங்கள் தொடர்பான பிரச்சனையை இத்துறைக்கென தனிப்பட்ட ஒழுங்குமுறை ஆணையம் சரி செய்ய முடியும் எனவும் விளம்பர நிறுவனங்கள் தரப்பில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications