ஆன்லைனில் ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்வது இவ்வளோ ஈஸியா.. இது தெரியாம போச்சே..!

சென்னை: நாட்டில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு வேலையைச் செய்து பணம் சம்பாதித்து, அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும், என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம். அதற்காக சிலர் கஷ்டப்பட்டு உழைக்கின்றனர். ஆனால் இரண்டு முதல் மூன்று நிமிடங்களில், உங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும், என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதன் விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

உங்களிடம் பழைய ரூபாய் நோட்டுகளில் 786 என்ற தொடர் எண் இருந்தால், அதனை வைத்து நீங்கள் ஆன்லைன் தளமான ஈபே, காயின் பசார், ஓஎல்எக்ஸ் இணையத்தளங்களில் விற்று நல்ல தொகையைப் பெற முடியும். இதற்கு 1, 2, 10, 100, 500, 700 என எந்த ரூபாய் நோட்டுகளில் வேண்டுமானாலும் 786 கொண்ட தொடர் எண் இருக்கலாம். இது போன்ற எண் கொண்டு அச்சிடப்பட்ட நோட்டுகள் பழமையானதாகவும், அரிதானதாகவும் கருதப்படுகின்றன. எனவே இது போன்ற ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு ஒரு மக்கள் கூட்டம் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

 ஆன்லைனில் ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்வது இவ்வளோ ஈஸியா.. இது தெரியாம போச்சே..!


இதற்கு முன், இது போன்ற ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்ததன் மூலமாக சிலர் ரூ. 3 லட்சம் வரை சம்பாதித்துள்ள செய்திகளை நாம் தெரிந்து இருப்போம். சரி உங்களிடம் இந்த தொடர் எண் கொண்ட ரூபாய் நோட்டுகள் இருந்தால் எப்படி விற்பனை செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

Ebay.com இணையதளங்களில் எவ்வாறு ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்வது?:
ஸ்டெப் 1: www.ebay.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
ஸ்டெப் 2: ஹோம் பேஜில் உங்களுடைய பெயரை விற்பனையாளராக பதிவு செய்து கொள்ளவும்.
ஸ்டெப் 3: நீங்கள் விற்க விரும்பும் ரூபாய் நோட்டின் படத்தைத் தெளிவாகப் படம் எடுத்து அப்லோட் செய்யவும். அதன் பின் ஈபே இணையதளம், அதனை பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவதற்கு பயன்படுத்துபவர்களிடம், உங்களின் ரூபாய் நோட்டுகள் குறித்த விளம்பரத்தைக் காண்பிக்கும்.
ஸ்டெப் 4: அந்த விளம்பரத்தை பார்த்து, யாருக்கு இந்த வகை ரூபாய் நோட்டுகள் தேவைப்படுகிறதோ அவர்கள் உங்களின் மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்வார்கள்.

தற்போது 1, 2 ரூபாய் காயின்கள் மற்றும் 1, 2, 5 ரூபாய் நோட்டுகளும் ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் விடப்படுகிறது. உங்கள் உண்டியலில் உள்ள பழைய 10 ரூபாய் நோட்டுக்கு சில நிமிடங்களில் ரூ. 25,000 வரை நீங்கள் பெற முடியும். காயின் பசார் இணையதளம் பழைய நோட்டுகளை ஆன்லைனில் விற்று பணம் சம்பாதிப்பதற்கான பிரத்தியேக இணையதளத்தைத் வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம்.

இது போன்ற நோட்டுகளை தவிர மாதா, வைஷ்ணவி தேவி உருவம் கொண்ட நாணயங்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

குறிப்பு: நீங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை விற்பதோ அல்லது வாங்குவதோ உங்களுடைய தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. ஏனெனில் ரிசர்வ் வங்கி, இது போன்ற ரூபாய் நோட்டுகள் விற்பனையை ஆதரிக்கவில்லை. உங்கள் நோட்டு நீங்கள் நினைக்கும் விலைக்கு விற்பனையாகாமல் கூட போகலாம். அதேபோல் நீங்கள் விற்கும் நோட்டுகளுக்கு அதிக டிமாண்ட் இருந்தால் அவை நல்ல லாபத்தையும் பெற்று தரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+