நம் நாட்டில் தங்கம் என்றாலே தனி மவுசு தான். தங்கத்திற்கென்று தனி பாரம்பரிய கலாச்சாரம் இருந்து வருகிறது. தேவைப்படும் நேரங்களில் தங்கத்தை அடமானம் வைத்து பணம் பெறலாம். இதற்காகவே பிரத்தியேகமாக நகை அடகு கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதே நேரம் தங்கத்திற்கு சற்று அதிகமான பணம் வேண்டும் என்றால் அவற்றை உடனே விற்பனையும் செய்ய முடியும். மற்ற முதலீட்டு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்திருந்தால் பாதியில் எடுக்க முடியாது.
அப்படியே பாதியில் பணத்தை எடுத்தாலும் அதற்கு அபராதம், குறைந்த வட்டி வருமானம் போன்ற பிற சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனாலேயே பல இந்தியக் குடும்பங்களின் முதன்மை முதலீடு தங்க நகைகள் மட்டுமே. சிலர் தங்களிடம் இருக்கும் தங்கத்தை மாற்றி பணமாக பெறுகின்றனர். அப்படி தங்கத்தை ஒரு நகைக்கடைக்காரரிடம் விற்கும்போது, அவற்றின் மதிப்பை அவர் எப்படி தீர்மானிக்கிறார்? எதன் அடிப்படையில் இந்த விலை கணக்கிடப்படுகிறது என்பது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

இந்தப் பதிவைப் பார்த்து முடித்த பின் அடுத்த முறை நீங்கள் நகைக்கடைக்கு சென்றால் உங்கள் தங்கத்தின் மதிப்பு எவ்வளவு? என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்.
கோல்ட் எக்ஸ்சேஞ்ச் ரேட் என்றால் என்ன?: கோல்ட் எக்ஸ்சேஞ்ச் ரேட் என்பது ஒரு நகைக்கடைக்காரர் உங்களுடைய பழைய தங்கத்தை வாங்குவதற்கு அல்லது அதை மாற்றி புதிய நகை வழங்குவதற்கு மதிப்பிடும் விகிதமாகும். இந்த விகிதம் 3 முக்கிய காரணிகளின் அடிப்படையில் தான் கணக்கிடப்படுகிறது.
தங்கத்தின் தூய்மை: இது பொதுவாக கேரட்டில் நிர்ணயிக்கப்படும். உதாரணமாக 22 கேரட், 18 கேரட், 24 கேரட் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். 24 கேரட் என்பது தூய தங்கம். இதில் 99.9 சதவீதம் தூய தங்கம் இருக்கும். ஆனால் தங்கம் மிகவும் மிருதுவான உலோகம். இதை வளைத்து, முறுக்கி நகைகள் செய்ய முடியாது. நகைகளாக வாங்க வேண்டும் என்றால் அது 22 கேரட்டில் தான் வாங்க முடியும். 22 கேரட்டில் 91.6 சதவீதம் தூய தங்கம் இருக்கும். இதைத்தான் 916 தங்கம் என்று கூறுவர்.இந்தத் தங்கத்தில் பிற உலோகங்களான சில்வர் மற்றும் காப்பர் போன்றவற்றை கலந்து தான் நகைகள் செய்யப்படும்.
நீங்கள் விற்கும் பொருளின் எடை: இரண்டாவதாக நீங்கள் எத்தனை கிராம் தங்கத்தை விற்கிறீர்கள் அல்லது மாற்றுகிறீர்கள் என்பதை பொறுத்தும் விலை நிர்ணயம் செய்யப்படும்.
சந்தை நிலவரம்: ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுக்கு உட்படும். எனவே நீங்கள் தங்கத்தை விற்பனை செய்யும் போது என்ன விலையில் விற்பனையாகிறதோ அதற்கு ஏற்பவும் உங்களுடைய தங்கத்தின் மதிப்பு மாறுபடலாம்.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள். சந்தை போக்குகள். அமெரிக்கா டாலருடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல காரணிகளைப் பொறுத்து தங்க விலையில் மாறுதல் ஏற்படும்.
கோல்ட் எக்ஸ்சேஞ்ச் ரேட் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: நகை கடைக்காரர்கள் பயன்படுத்தும் ஒரு ஃபார்முலாவை வைத்து இந்த விகிதத்தை எளிதில் கண்டுபிடிக்கலாம்.
கோல்ட் எக்ஸ்சேஞ்ச் ரேட் = (24K தங்க விலை (1 கிராம்) x நீங்கள் வைத்திருக்கும் தங்கத்தின் தூய்மை %) x தங்கத்தின் எடை
இதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம். நீங்கள் 22 கேரட் கேரட்டில் செய்யப்பட்ட 10 கிராம் நெக்லஸை மாற்ற விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முன்பே பார்த்தோம் 22 கேரட்டில் 91.6% தூய்மையான தங்கம் இருக்கும் என்று.. இன்றைய நிலவரப்படி 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10,150. தற்போது இந்த ஃபார்முலாவை வைத்து உங்கள் தங்கத்திற்கான மதிப்பை கணக்கிடலாம்.
கோல்ட் எக்ஸ்சேஞ்ச் ரேட் = (10,150 x 91.6%) x 10 = ரூ. 93,014
உங்களுடைய தங்கத்தின் மதிப்பு ரூ. 93,014-ஆக இருக்கும். ஆனால் இந்த விலைக்கு நகைக்கடைக்காரர் வாங்க மாட்டார். இதிலிருந்து சில கட்டணங்கள் கழிக்க வேண்டியிருக்கும். உங்கள் தங்கத்தை உருக்குவதற்கான கட்டணம், அதன் தூய்மையை பரிசோதனை செய்வதற்கான கட்டணம், மேக்கிங் சார்ஜஸ் இருந்தால் அந்த கட்டணம் என அனைத்தையும் கழித்துக் கொண்டு உங்கள் தங்கத்திற்கான மதிப்பு நிர்ணயிக்கப்படும்.
கழிவுகள் பொதுவாக 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையில் இருக்கலாம். மேலே கூறப்பட்டுள்ள உதாரணத்திற்கு 8 சதவீதம் தொகை கழிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் ரூ. 93,014-ல் 8 சதவீதம் கழிந்தால், ரூ.7,448 போக மீதம் ரூ. 90,566 இருக்கும். எனவே இந்தத் தொகையை நீங்கள் ரொக்கமாக பெறலாம் அல்லது புதிய நகையை வாங்கி பயன்படுத்தலாம்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications