இந்தியா முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுமூகமான பயணத்திற்காகவும், பணத் தேவையை நீக்கி, போக்குவரத்து நெரிசல்களை சமாளிக்கவும் FASTag உதவிகரமான ஒன்றாக மாறியுள்ளது. FASTag மூலம், விரைவாக ஸ்கேன் செய்யப்பட்டு தானாகவே உங்கள் கணக்கிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் அதற்கு SMS அறிவிப்பும் அனுப்பப்படுகிறது. இதனால் சுங்கக் கட்டணம் செலுத்துவது சிரமமில்லாமல் இருக்கும். உங்கள் வாகனத்தை விற்க விரும்பும் போது FASTag-ஐ கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
உங்கள் காரை விற்கும் போது, வாங்குபவருக்கு சுமூகமான பரிவர்த்தனையை உறுதிசெய்ய உங்கள் FASTag-ஐ நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது. அதற்கு நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

FASTag பேலன்ஸை டிரான்ஸ்பர் செய்யவும்: உங்கள் FASTag கணக்கில் பேலன்ஸ் இருந்தால், நீங்கள் அதைப் பயன்படுத்தலாம் அல்லது மீதமுள்ள பேலன்ஸை புதிய உரிமையாளருக்கு மாற்றலாம். இந்த பரிமாற்றத்தை எளிதாக்க உங்கள் FASTag வழங்குநர் அல்லது வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ளவும்.
வாகன விவரங்களைப் புதுப்பிக்கவும்: பழைய வாகனத்தை விற்க முடிவெடுத்து, புதிய காரை வாங்கும் போது, தடையில்லா சேவையை உறுதிசெய்ய, புதிய வாகன விவரங்களுடன் உங்கள் FASTag கணக்கை அப்டேட் செய்யவும்.
NOC வழங்கவும்: உங்கள் காரை வாங்குபவருக்கு தடையில்லாச் சான்றிதழை (NOC) வழங்கவும். FASTag தொடர்பான நிலுவையில் உள்ள பாக்கிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். NOC ஆவணம் FASTag பரிமாற்றத்திற்கான சான்றாக செயல்படுகிறது.
தேவையான ஆவணங்களை வைத்திருங்கள்: வாகனப் பதிவுச் சான்றிதழ், FASTag ரசீது, காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் NOC போன்ற அனைத்து அத்தியாவசிய ஆவணங்களையும் உடன் வைத்திருங்கள். FASTag பேலன்ஸ் டிரான்ஸ்பர் செயல்முறைக்கு இவை அவசியம்.
FASTag-ஐ செயலிழக்கச் செய்யுங்கள்: பேலன்ஸை டிரான்ஸ்பர் செய்த பிறகு, அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டைத் தடுக்க நீங்கள் விற்கப்பட்ட வாகனத்துடன் தொடர்புடைய tag-ஐ செயலிழக்கச் செய்ய உங்கள் FASTag வழங்குநரைத் தொடர்புகொள்ளவும். உங்கள் FASTag இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் இருந்தால், அவர்களின் வாடிக்கையாளர் சேவை உதவி எண்ணை (1033) அழைத்து ரத்து செய்ய சொல்லலாம்.
புதிய விதிகள் அமல்: FASTag புதிய விதிகளின்படி, KYC அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். FASTag சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட அனைத்து FASTag-களுக்கும் KYC ஐ அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும், இந்த செயல்முறை ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்குகிறது. FASTag வாடிக்கையாளர்கள் NPCI வழிகாட்டுதல்களின்படி இந்தக் காலக்கட்டத்தில் தங்கள் KYC புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
பழைய வாகன உரிமையாளர்களுக்கான முக்கியமான அப்டேட்: ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல், நிறுவனங்கள் NPCI உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும். இதில் 3 முதல் 5 ஆண்டுகள் பழமையான FASTag-களுக்கான KYC-ஐப் புதுப்பித்தல் மற்றும் 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவற்றை அக்டோபர் 31-க்குள் மாற்றுதல் ஆகியவை அடங்கும். வாகன உரிமையாளர்கள் தங்கள் KYC-ஐ அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க வேண்டியது அவசியம்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications