இந்திய பார்மா சந்தையில் முக்கியமான மாற்றத்தை உருவாக்கும் வகையில், செமக்ளுடைட் (Semaglutide) மருந்தின் பேட்டென்ட் வெள்ளிக்கிழமை காலாவதியானது. உடல் எடைக் குறைப்பு மற்றும் Type 2 நீரிழிவு சிகிச்சையில் உலகளவில் பிரபலமான இந்த மருந்து, Novo Nordisk நிறுவனத்தின் 'Wegovy' மற்றும் 'Ozempic' போன்ற மருந்துகளின் அடிப்படையாக இருந்தது.
தற்போது பேட்டென்ட் காலாவதி காரணமாக, இந்திய நிறுவனங்கள் மலிவு விலையில் ஜெனெரிக் மருந்துகளாக அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பேட்டென்ட் காலாவதியானதும், இந்திய மருந்து நிறுவனங்கள் விரைவாக ஜெனெரிக் பதிப்புகளை வெளியிடத் தயாராக உள்ளன.
இதில் முதல் நிறுவனமாக டாக்டர் ரெட்டீஸ், 'Obeda' எனும் புதிய செமக்ளுடைட் (semaglutide) மருந்தை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய நிறுவனங்கள் இந்த மருந்தை உள்நாட்டிலேயே தயாரித்து விற்கப்படும் போது, தற்போதைய உயர்ந்த விலை மருந்து வகைகள் கடுமையாக விலை குறைப்புடன் சந்தையிவ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 'Ozempic' ஒரு மாத சிகிச்சை செலவு ₹8,800 முதல் ₹11,000 வரை இருக்கும் நிலையிலும், 'Wegovy' ₹10,000 முதல் ₹16,000 வரை விற்கப்படுகிறது. ஆனால், ஜெனெரிக் போட்டி அதிகரித்தால், இந்த செலவு மாதத்திற்கு ₹3,000 முதல் ₹5,000 வரை குறையக்கூடும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். இது, சாதாரண மக்களுக்கும் இந்த சிகிச்சையை அணுகக்கூடியதாக மாற்றும்.
கணிப்பிற்கு ஏற்றார் போல் தற்போது டாக்டர் ரெட்டீஸ் தனது Obeda மருந்தை ரூ.4,200 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்திய மருந்து நிறுவனங்கள்
பேட்டென்ட் காலாவதி காரணமாக இந்திய மருந்து நிறுவனங்களுக்கு புதிய சந்தை திறக்கப்பட்டு உள்ளன. இதனால் நாட்டின் முன்னணி மருந்து நிறுவனங்களான Cipla, Sun Pharma, Biocon, Natco Pharma, Zydus Lifesciences மற்றும் Mankind Pharma போன்ற நிறுவனங்கள் ஜெனெரிக் பதிப்புகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளன.
பார்மா துறை நிபுணர்கள் கணிப்பின்படி, சில மாதங்களில் சுமார் 50 பிராண்டு ஜெனெரிக் மருந்துகள் சந்தையில் அறிமுகமாகலாம் என தெரிவித்துள்ளனர். இது இந்தியாவின் கடுமையான போட்டி நிறைந்த மருந்து துறையின் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச முதலீட்டு வங்கியான Jefferies, இந்த மாற்றத்தை "மாஜிக் பில்" தருணமாகக் குறிப்பிட்டுள்ளது. சரியான விலை மற்றும் பயன்பாடு அதிகரித்தால், இந்தியாவில் மட்டும் செமக்ளுடைட் சந்தை 1 பில்லியன் டாலர் அளவிற்கு வளரக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
செமக்ளுடைட் எப்படி செயல்படுகிறது ?
செமக்ளுடைட், GLP-1 receptor agonist என்ற வகையைச் சேர்ந்தது. இது உடலில் பசி உணர்வை கட்டுப்படுத்தும் செயல்பாட்டை உருவாக்குகிறது. இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து, வயிறு காலியாகும் வேகத்தை மந்தமாக்குவதன் மூலம், விரைவில் பசியடையும் உணர்வை குறைக்கிறது. இதனால், உடல் எடையை குறைக்கவும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இந்தியாவில் அதிகரிக்கும் தேவை
இந்தியாவில் தற்போது 7.7 கோடி மக்களுக்கு மேல் Type 2 நீரிழிவு நோய் உள்ளது. அதேசமயம், அதிக உடல் எடை கொண்டவர்களின் எண்ணிக்கையும் உலகில் அதிகமாக உள்ளது. நகர வாழ்க்கை முறை, அதிக கார்போஹைட்ரேட் உணவு மற்றும் உடற்பயிற்சி குறைவு ஆகியவை இந்த நிலையை அதிகரித்துள்ளன.
இந்த சூழலில், மலிவு விலையில் செமக்ளுடைட் கிடைப்பது, சுகாதாரத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

விரைவான வளர்ச்சி
இந்தியாவின் obesity மருந்து சந்தை 2021இல் 16 மில்லியன் டாலரில் இருந்து தற்போது 100 மில்லியன் டாலர் வரை வளர்ந்துள்ளது. குறிப்பாக, 2022இல் அறிமுகமான 'Rybelsus' (மாத்திரை வடிவ செமக்ளுடைட்) இந்த வளர்ச்சியை வேகப்படுத்தியது.
மேலும், இந்திய மருந்து துறை தற்போது 60 பில்லியன் டாலர் மதிப்பில் உள்ளது. 2030க்குள் இது இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனெரிக் மருந்து உற்பத்தியில் இந்தியாவின் வலிமை, இந்த புதிய போட்டியை மேலும் தீவிரப்படுத்தும்.
GLP-1 மருந்துகளின் அபத்துகள்
GLP-1 receptor agonist வகையைச் சேர்ந்த மருந்துகள், உடல் எடைக் குறைப்பு மற்றும் Type 2 நீரிழிவு கட்டுப்பாட்டில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அவை முழுமையாக அபாயமற்றவை அல்ல. இந்த மருந்துகளை பயன்படுத்தும் போது வாந்தி, மயக்கம், செரிமானக் கோளாறுகள் போன்ற சாதாரண பக்கவிளைவுகள் ஏற்படலாம். சில அரிதான நிலைகளில் கல்லீரல் கற்கள் (gallstones) அல்லது பான்கிரியாஸ் அழற்சி (pancreatitis) போன்ற தீவிர பிரச்சினைகளும் உருவாகும் அபாயம் உள்ளது.
மேலும், வேகமாக உடல் எடை குறையும் போது, போதுமான புரத உணவு மற்றும் உடற்பயிற்சி இல்லையெனில், தசை இழப்பு (muscle loss) ஏற்படும் சாத்தியம் உள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம்.
இதுக்குறித்து மருத்துவர்கள் கூறுகையில், பலர் இந்த மருந்தின் செயல்பாட்டை தவறாக புரிந்துகொள்கிறார்கள். சமூக ஊடகங்கள் மற்றும் பிரபலங்களின் விளம்பரங்களால், இந்த மருந்து பயன்படுத்தினால் சில வாரங்களிலேயே அதிக எடை குறையும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், இது எல்லோருக்கும் பொருந்தாது.
இந்த மருந்தின் வெற்றி "சரியான நோயாளி தேர்வு" மீது தான் சார்ந்துள்ளது. உடல் எடை அளவைக் காட்டும் BMI மட்டும் பார்க்காமல், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்ற உடன் இருக்கும் நோய்களையும் மருத்துவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். இதன் படி தான் யாருக்கு இத்தகைய மருந்து பரிந்துரைக்க வேண்டும் என கணிக்கின்றனர்.
அதே நேரத்தில், உணவு பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மிகவும் முக்கியம். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களை தொடர்ந்தால், இந்த மருந்து மட்டுமே எதிர்பார்த்த பலனை வழங்க முடியாது என்பதும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications