சென்னை: சிங்கப்பூரை தலைமை இடமாகக் கொண்ட செம்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் கிரீன் அம்மோனியா ஆலையை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியுள்ளது. தமிழக அரசு சார்பில் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த மாநாட்டில் சுமார் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட சிங்கப்பூரை சேர்ந்த செம்பார்க் நிறுவனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் முதலீடு செய்வதாக அறிவித்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கிரீன் அம்மோனியா ஆலை அமைக்க 36 , 238 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனை அடுத்து இந்த நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக புதன்கிழமை அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலினும் கலந்து கொண்டார். இந்த புதிய ஆலையின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 1511 வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கிரீன் ஹைட்ரஜன் லிமிடெட், கைசு எலக்ட்ரிக் பவர் கம்பெனி , நிப்பான் கைசா ஆகிய இந்திய மற்றும் ஜப்பானை சேர்ந்த நிறுவனங்கள் கூட்டாக கிரீன் அம்மோனியா ஏற்றுமதி திட்டத்திற்காக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தான் தூத்துக்குடி மாவட்டத்தில் செமகார்பின் கிரீன் அம்மோனியா ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளத.
இது தொடர்பாக செம் கார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 160 ஏக்கர் நிலப் பரப்பரப்பில் கிரீன் அம்மோனியா ஆலை நிறுவ இருக்கிறோம் .இங்கே கிரீன் அம்மோனியா தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஓராண்டுக்கு இரண்டு லட்சம் மெட்ரிக் டன்கள் கிரீன் அம்மோனியாவை உற்பத்தி செய்வதே தங்களுடைய இலக்கு எனக் கூறியுள்ளது. தற்போது ஆலையை கட்டமைப்பதற்கான அனைத்து பணிகளும் துவங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கிரீன் எரிசக்தி துறை சார்ந்த முயற்சிகளில் தமிழ்நாடு எப்போதுமே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என கூறினார். கிரீன் எரிசக்திக்கு இந்தியா மாறிவரும் நிலையில் அதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது எனக் கூறினார். தூத்துக்குடியில் அமைய இருக்கும் இந்த ஆலை சர்வதேச அளவில் கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தியில் தமிழ்நாட்டை முக்கிய இடத்திற்கு கொண்டுவரும் என நம்புவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications