டாடா குழுமம், டவர் செமிகண்டக்டர் மற்றும் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து, மொஹாலியில் உள்ள செமிகண்டக்டர் லேப் (எஸ்சிஎல்) மாற்றியமைப்பதற்காக அரசாங்கம் ஒன்பது ஏல விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
48 ஆண்டுகள் பழமையான இந்த ஆய்வகத்தை நவீனமயமாக்க மத்திய அரசு சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான நிதியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போது இருக்கும் ஒரே சிப் உற்பத்தி தொழிற்சாலை, அதுவும், அரசுக்கு சொந்தமான தொழிற்சாலை தான் இந்த Semiconductor Laboratory. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது சீனா, தைவான் ஆகிய நாடுகளுக்கு முன்னோடியாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சிப் தான் சந்திரயான் போன்ற விண்வெளி ஆய்வு திட்டங்கள், பாதுகாப்புத் துறை திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் சிப்கள் அனைத்தும் அரசு திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்து இஸ்ரோ கீழ் இயங்கி வருகிறது.
சொல்லப்போனால் Semiconductor Laboratory குறித்துப் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, இந்திரா காந்தி திட்டமிட்டது போல் நடந்திருந்தால் இந்தியா தான் உலக நாடுகளுக்கே சிப் சப்ளையராக இருந்திருக்க வேண்டும், ஆனால் 'அந்த' ஒரு விபத்து நாட்டின் எதிர்காலத்தைத் தலைகீழாக மாற்றியுள்ளது.
Semiconductor Laboratory பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இதை லிங்கை கிளிக் செய்யுங்க.
இந்த நிலையில் இந்திரா காந்தி துவங்கிய SCL நிறுவனத்தைத் தற்போதைய காலகட்டத்தில் நவீனமயமாக்கலின் அவசியத்தை உணர்ந்து மோடி தலைமையிலான அரசு 1 பில்லியன் டாலர் முதலீட்டில் புதுப்பிக்க உள்ளது.
இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும் வேளையில், நாட்டில் இருக்கும் ஒரே சிப் உற்பத்தி தொழிற்சாலை மீட்டெடுப்பது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல் இந்தியாவில் பாதுகாப்புத் துறை உற்பத்தி அதிகரிக்கும் வேளையில், SCL நவீனமயமாக்கல் பெரும் பலத்தைக் கொடுக்கும்.
SCL நிறுவனம், இஸ்ரேல் நாட்டின் டவர் செமிகண்டக்டர் உதவியுடன் தற்போது 180 நேனோமீட்டர் சிப் தயாரிக்கப்படுகிறது. ஆனால் தற்போது சந்தையில் 6 நேனோமீட்டர், 7 நேனோமீட்டர் சிப் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு செமிகண்டக்டர் சிப் அதன் பயன்பாட்டையும், தேவையைப் பொருத்து மாறும்.


Click it and Unblock the Notifications