இந்தியாவின் உற்பத்தி துறை வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல முக்கிய தேவையாக இருப்பது செமிகண்டக்டர் துறை தான், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் முதல் வாகனங்கள், உற்பத்தி துறை வரையில் அனைத்திற்கும் செமிகண்டக்டர் மிகவும் முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு 2021 டிசம்பரில் மத்திய அரசு செமிகண்டக்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.76,000 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகை உடன் PLI திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட 5 திட்டத்தில் 4 திட்டங்கள் குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நாட்டின் செமிகண்டக்டர் துறையை வலுப்படுத்தும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று, கேய்ன்ஸ் செமிகண்டக்டர் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிய செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஆலை குஜராத்தின் சானந் என்னும் ரூ.3,300 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது.
இந்த புதிய தொழிற்சாலையில் தினசரி 60 லட்சம் செமிகண்டக்டர் சிப்ஸ்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டு இருக்கும். இந்த சிப்ஸ் தொழில்துறை, ஆட்டோமொபைல், எலக்ட்ரிக் வாகனங்கள், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ், தொலைத்தொடர்பு மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட அதிகளவிலான துறைகளுக்குச் சேவை செய்யும்.
இந்த ஒப்புதல் இந்தியாவின் செமிகண்டக்டர் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் அரசாங்கத்தின் பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த சமீபத்திய ஒப்புதலுக்கு முன், மத்திய அமைச்சரவை ஏற்கனவே 4 செமிகண்டக்டர் திட்டங்களுக்கு அதன் 76000 மதிப்பிலான மானிய திட்டத்திற்கு ஒப்புதலை வழங்கியுள்ளது.
முதல் தொழிற்சாலைக்கு ஜூன் 2023ல் குஜராத்தின் சானந்தில் அமெரிக்காவின் மைக்ரான் நிறுவனம் செமிகண்டக்டர் துறையில் OSAT தொழிற்சாலையை அமைக்க ஒப்புதல் அளித்தது.
இதை தொடர்ந்து மத்திய அரசு பிப்ரவரி 2024ல் ஓரே அறிவிப்பில் மூன்று தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் வழங்கி இந்திய செமிகண்டக்டர் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இதில் 2 தொழிற்சாலையை டாடா குழுமம் குஜராத்தின் டோலேராவில் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலையும், அசாம் மாநிலம் மொரிகாஞ்சியில் OSAT தொழிற்சாலையும் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதேபோல் குஜராத்தின் சானந்தில் சிஜி பவர் நிறுவனம் செமிகண்டக்டர் தொழிற்சாலையை அளிக்க ஒப்புதல் அளித்தது. இந்த சிஜி பவர் தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு பல தசாப்தங்களாக வலிமையுடன் வளர்ந்து வரும் முருகப்பா குழுமத்திற்குச் சொந்தமானது.
இந்த நிலையில் 5வதாக கேய்ன்ஸ் செமிகண்டக்டர் நிறுவனத்திற்கு புதிய செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஆலை குஜராத்தின் சானந் என்னும் ரூ.3,300 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது.
இப்படி 5 புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையில் 4 குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது. குஜராத் மாநிலம் எப்படி எண்ணெய் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதேபோல் செமிகண்டக்டர் துறையிலும் ஆதிக்கம் செலுத்த உள்ளது.
தற்போது கட்டுமான நிலையில் உள்ள இந்த நான்கு திட்டங்களும், சுமார் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் தினசரி சுமார் 7 கோடி சிப்ஸ்களை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்குக் கிடைக்க உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications