தென்னிந்திய நகரங்களான சென்னை, கோவை மற்றும் பெங்களூரு ஆகியவை இந்தியாவின் வளர்ந்து வரும் மூத்த குடிமக்களுக்கான வீட்டு வசதி துறையில் முன்னணி வகிக்கின்றன. இந்த துறையில் தற்போது கிடைக்கும் மொத்த 20,000 வீடுகளில் கிட்டத்தட்ட 60% பங்கு இந்த தென்னிந்திய நகரங்களில் இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என நீங்கள் கேட்கலாம்..? பொதுவாக ஒரு இடத்தில் டிமாண்ட் இருந்தால் மட்டுமே அதற்கான சந்தை உருவாகும். அப்படிப் பார்க்கும் போதும் மூத்த குடிமக்களுக்கான வீட்டு வசதி திட்டத்தில் சுமார் 60 சதவீதம் சென்னை, கோவை, பெங்களூரில் இருப்பது இப்பகுதியில் அதிகப்படியான மூத்தக்குடி மக்கள் இருப்பதைக் காட்டுகிறது.

ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வளர்ச்சி, வர்த்தகம், சேவைகள், தேவைகள் அனைத்தும் மாறியுள்ளது. இதே நிலை தான் தற்போது சென்னை, கோவை, பெங்களூரில் உருவாகிறதா என்ற கேள்வி எழுகிறது.
மூத்த குடிமக்களுக்கான மொத்த குடியிருப்பில் 60 சதவீதம் தென்னிந்தியாவில் இருக்கும் வேளையில், வட இந்திய நகரங்களில் 20%, மேற்கு இந்தியா 16% மற்றும் கிழக்கு இந்தியா வெறும் 4% பங்கைக் கொண்டுள்ளன. இந்த பங்கீட்டை மூத்த குடிமக்களின் எண்ணிக்கை தாண்டி, மூத்த குடிமக்களின் பொருளாதார நிலையையும் காட்டுகிறது. அதாவது தென்னிந்தியா மூத்த குடிமக்களின் நிதி நிலை நாட்டின் மற்ற பகுதிகளை விடவும் மேம்பட்ட நிலையில் உள்ளது.
மூத்த குடிமக்களுக்கான ரியல் எஸ்டேட் அல்லது குடியிருப்புகள் என்பது, முதுமையின் காரணமாக மக்களின் வாழ்வை எளிமைப்படுத்தும் குடியிருப்புகளும், வசதிகள் கொண்ட பகுதி. உதாரணமாக மூத்த குடிமக்களுக்கான ஒரு அப்பார்ட்மென்ட் என்றால் வீட்டு முழுவதும் வயதனாவர்கள் நடக்க ஏதுவான தரைதளத்தில் துவங்கி பாத்ரூம்-ல் தேவையான இடத்தை கைபிடி வரையில், காமன் கிட்சன் அமைப்பு முதல் 24 மணிநேரமும் மருத்துவ வசதிகள் வரையில் சகலமும் இருக்கும்.
இத்தகைய கட்டமைப்பில் மூத்த குடிமக்கள் யாருடைய உதவியும் நம்பி இல்லாமல் தனியாக வாழ முடியும். இதுபோன்ற குடியிருப்புகளை தற்போது என்ஆர்ஐ மக்கள் அவர்களது பெற்றோர்களுக்கான அதிகம் வாங்குகின்றனர். அப்படி பார்க்கும் போது தென்னிந்தியாவில் இருக்கும் மக்கள் அதிகளவில் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியாக வரும்.
இந்தியாவின் மக்கள்தொகை வயதாகி வருவதும் மூத்த குடிமக்களுக்கான ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக உள்ளது. 2050 ஆம் ஆண்டளவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 346 மில்லியனாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள்தொகை மாற்றம், மூத்த குடிமக்களுக்கான ரியல் எஸ்டேட் துறையை 2030 ஆம் ஆண்டுக்குள் ரூ.64,500 கோடியாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துறை ஆண்டுக்கு சுமார் 27% வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, கோவை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்கள் மட்டுமே இந்தியாவின் மொத்த மூத்த குடிமக்களுக்கான வசிப்பிட பங்கில் கிட்டத்தட்ட 45% பங்கைக் கொண்டுள்ளன. டெல்லி-NCR, புனே மற்றும் அகமதாபாத் ஆகியவை தங்கள் தனித்தனி பிராந்தியங்களில் குறிப்பிடத்தக்க பங்குகளைக் கொண்டுள்ளன. மறுபுறம், கொல்கத்தா கிழக்குப் பகுதியில் ஒப்பீட்டளவில் சிறிய பங்கைக் கொண்டுள்ளது.
More From GoodReturns

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications