சென்னை: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme) இந்திய அரசாங்கத்தால் 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்கீம் ஆகும். இந்த சேமிப்பு திட்டம் பாதுகாப்பான முதலீட்டின் மூலம், சிறந்த வருமானத்தை வழங்குவதற்காக தொடங்கப்பட்டதாகும். வங்கிகளில் மட்டுமே இல்லாமல் அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தினைத் தொடங்கலாம்.
SCSS விண்ணப்பிப்பதற்கான தகுதி: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் எனப்படும் Senior Citizen Saving Scheme என்பது 60 வயது மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டமாகும். மேலும் 55 வயது முதல் 60 வயது வரை உள்ள நபர்களும், விஆர்எஸ் அல்லது சிறப்பு விஆர்எஸ் இன் கீழ் ஓய்வு பெற்றவர்களும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் அல்லாது 50 வயதிற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற பாதுகாப்புப் பணியாளர்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். NRI கள் SCSS திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்ட கணக்கை (எஸ்சிஎஸ்எஸ்) எவ்வாறு திறப்பது: SCSS கணக்கினை தொடங்க அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ் அல்லது பேங்க்குகளை அணுகலாம். மனைவியுடன் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ கணக்கினைத் தொடங்கலாம். இதற்கு குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். நீங்கள் செலுத்தும் பணம் 1000 மடங்காக இருக்கலாம். இந்த கணக்கினைப் பயன்படுத்தி ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்த பின் ஒரே அக்கௌன்ட்டில் இருந்து பல முறை பணம் எடுக்க அனுமதிக்கப்படமாட்டாது. ஒவ்வொரு ஆண்டுக்கும் டெபாசிட் செய்த பணத்திற்கு 8.2% வட்டியை இத்திட்டம் வழங்குகிறது. உதாரணமாக ரூ.30 லட்சம் நீங்கள் டெபாசிட் செய்தால் அதற்கான ஆண்டு வட்டியாக ரூ.2.46 லட்சம் கிடைக்கும்.
SSCS இன் கால அளவு: SSCS திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள். விருப்பம் உள்ளவர்கள் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க முடியும். அதற்கான படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அப்படியான கணக்குகள் மீண்டும் ஒரு வருடத்தில் தேவைப்பட்டால் எந்த வித அபராதம் இன்றி முடிக்கப்படலாம். 5 வருடத்திற்குள் தொகையை திரும்பப் பெறுவதும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் நிபந்தனை என்னவென்றால் கணக்கு தொடங்கப்பட்ட நாளில் இருந்து 1 வருடத்திற்கு பிறகு மட்டுமே முடியும். அனால் அதற்கு 1.5 சதவிகிதம் வரை பிடித்தம் இருக்கலாம்.
மூத்த குடிமக்கள் திட்டத்தின் பலன்கள்: இது அரசாங்க திட்டம் என்பதால் அனைவரின் நம்பகமான முதலீட்டு விருப்பமாகிறது. இந்தத் திட்டத்தின் நன்மையை, இந்திய முழுவதும் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கி ஆகியவற்றில் இருந்து எளிதாகப் பெற முடியும்.
மூத்த குடிமக்களுக்கான எஸ்சிஎஸ்எஸ் திட்டமானது மிகவும் பாதுகாப்பான திட்டமாக கருதப்படுவதால் அனைவரும் இதில் தொகையை சேமிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications