இந்திய ஐடி சேவை துறையில் பல பிரச்சனையை எதிர்கொண்டு வரும் வேளையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என பல வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கணித்திருக்கும் வேளையில் டெக் மஹிந்திராவின் மூத்த அதிகாரி ஒருவர் ஐடி ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
இதன் மூலம் ஒட்டுமொத்த ஐடி ஊழியர்களும் நம்பிக்கை உடன் புதிய வேலைவாய்ப்புகளை தேடும் படலத்தில் இறங்கியுள்ளனர். டெக் மஹிந்திராவின் மூத்த அதிகாரி என்ன கூறியுள்ளார்..?

செவ்வாய்க்கிழமை Tech Mahindra-வின் புதிய தலைமை மார்கெட்டிங் அதிகாரியாக பணியில் சேர்ந்த பீயுஷ் துபே, இந்திய ஐடி சேவை துறையில் தற்போது உயர் அதிகாரிகளுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் பல மிட் சீனியர் அதிகாரிகள் பணியை ராஜினாமா செய்துவிட்டு வேறு நிறுவனத்தில் சேர்ந்துள்ள வேளையில் காலியான இடம் அதிகமாகியுள்ளது. மிட் சீனியர் அதிகாரிகள் மட்டும் அல்லாமல் CXO அளவிலும் அதிகப்படியான வேவைவாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்.
இதேபோல் இந்திய ஐடி சேவை துறையில் 3 முக்கியமான மாற்றங்கள் நடப்பதாகவும் 1. தொழில்நுட்ப துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, இதனால் நிறுவனங்கள் பல புதிய முயற்சிகளை கையில் எடுக்கும் காரணத்தால் இதை நிர்வாகம் செய்ய உயர் அதிகாரிகள் அதிகம் தேவை.
2. பெரிய நிறுவனங்கள் குறிப்பாக அதிக வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் கொண்ட பார்மா, ஹெல்த்கேர், ரீடைல், இன்பராஸ்டக்சர், உற்பத்தி ஆகிய துறை நிறுவனங்கள் டிஜிட்டல் சேவைகளை அதிகம் நாட துவங்கியுள்ளது. ஆனால் இது அனைத்தும் சிறிய அளவிலான திட்டம் என்பது பிரச்சனையாக இருந்தாலும் மிட் சீனியர் அளவிலான ஊழியர்கள் இதன் நிர்வாகத்திற்கு மிகவும் முக்கியம்.
3. அனைத்து துறையிலும், சேவையிலும் ஆட்டோமேஷன் முக்கிய பங்குகள் வகிக்கும் வேளையில் மிட் சீனியர் ஊழியர்களும், அவர்களை கட்டுப்படுத்தி தொடர்ந்து வர்த்தகத்தை ஈர்த்து விரிவாக்கம் செய்யும் பணிகளை நிர்வாகம் செய்ய துறை வாரியான ஊழியர்களும் அவசியம் இதனால் தற்போது சீனியர் ஊழியர்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் உருவாகியுள்ளது என கூறுகிறார்.


Click it and Unblock the Notifications