டெல்லி: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தேர்வாகி இருக்கும் நிலையில், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக விரைவில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிர படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் எக்னாமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள தகவலில் இருநாட்டு வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பான ஆவணங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்களாம்.

டொனால்ட் டிரம்பை பொருத்தவரை அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவது மற்றும் தொழில் துறையை ஊக்குவிப்பது என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். எனவே அவருடைய கவனம் முழுவதும் அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தான் இருக்கும் .
அதே வேளையில் அவர் மற்ற நாடுகளோடு வர்த்தக ரீதியான உறவில் மாற்றங்களை கொண்டு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டிரம்ப் தன்னுடைய தேர்தல் பரப்புரைகளின் போது இந்தியாவின் வரி நடைமுறைகள் குறித்தும் விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். அதாவது இந்தியா ஒரு tariff king என விமர்சித்துள்ளார். இந்தியா மோசமான வரி நடைமுறைகளையும் வர்த்தக நடைமுறைகளையும் பின்பற்றுவதாக அவர் கூறியிருக்கிறார்.
ஏனெனில் இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பல பொருள்களுக்கு பல மடங்கு வரி விதிப்பதாகவும் தொடர்ந்து சாடி வருகிறார். இந்த நிலையில் ட்ரம்ப் ஜனவரி மாதம் அதிபராக பதவி ஏற்பதற்கு முன்னதாகவே இரு நாட்டு வர்த்தக உறவுகள் மற்றும் தற்போது இந்தியாவின் வர்த்தக கொள்கைகள் குறித்து அவரது அரசாங்கத்திற்கு எடுத்து உரைக்கும் வகையில் ஆவணங்களை மத்திய அரசு அதிகாரிகள் தீவிரமாக தயாரித்து வருகின்றனர்.
ஏனெனில் கடந்த முறை அதிபராக இருந்தபோது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே குறிப்பிட்ட சில பொருட்களுக்கான வரி நடைமுறைகளை மாற்றியமைப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை தயார் செய்தார். ஆனால் அது அப்போது நடைமுறைக்கு வரவில்லை.
டொனால்ட் டிரம்ப் முதல் முறை அமெரிக்க அதிபராக பதவி வகித்த போது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு கூடுதல் வரியை விதித்தார்.
மேலும் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வேளாண் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தையும் விதித்தார். பின்னர் இரு நாடுகளும் உலக வர்த்தக அமைப்புக்கு சென்று இந்த பிரச்சினையை சரி செய்து கொண்டன.
இந்தியாவைப் பொறுத்தவரை இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் அமெரிக்காவுக்கு தான் செல்கின்றன . அதேபோல இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு செய்துள்ள மூன்றாவது பெரிய நாடாக அமெரிக்கா இருக்கிறது.
எனவே டிரம்ப அரசாங்கம் இருநாட்டு வர்த்தகத்தில் மாற்றம் கொண்டு வரும் அறிவிப்புகளை வெளியிடும் முன்பு டிரம்ப் நிர்வாகத்திற்கு தங்களின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு துரிதமாக இருக்கிறது.
More From GoodReturns

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!



Click it and Unblock the Notifications