இறக்கத்தில் சென்செக்ஸ்..! 40,116-ல் நிறைவு..!

நம் இந்திய நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி சரிவு, தொழில் துறை வளர்ச்சி சரிவு போன்ற இரண்டு செய்திகளுமே, இந்தியாவின் பொருளாதார மந்த நிலை இன்னும் சரியானதாகத் தெரியவில்லை என்பதை தெளிவாகச் சொல்கின்றன. அதோடு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் 72 ரூபாயைக் கடந்து வர்த்தகமாவது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 61.32 டாலருக்கு வர்த்தகமாகி வருவது எல்லாமும் கூட இந்திய சந்தையை பாதித்து இருக்கிறது.

ஒரு வேளை சந்தை நாளை ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால், 40,500 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு 40,650-ஐ அடுத்த ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.

இறக்கத்தில் சென்செக்ஸ்..!  40,116-ல் நிறைவு..!

கடந்த வாரத்திலேயே, சென்செக்ஸ் டே சார்ட்டில் இந்த டிரெண்டு முடிந்ததைப் போலத் தான் தெரிகிறது. நவம்பர் 07 கேண்டில் சார்ட் ஒரு ஹேங்கிங் மேன் பேட்டனைக் காட்டுகிறது. அதோடு அதற்கு முந்தைய நவம்பர் 06 அன்றைய குளோசிங் புள்ளியை உடைத்துக் கொண்டு, அதன் ஓப்பனிங் புள்ளிகளைத் தொட்டு நவம்பர் 07-ன் சந்தை வர்த்தகம் ஆகி இருக்கிறது. எனவே அடுத்து வரும்நாட்களில் சந்தை ஏற்றம் காண்பது கொஞ்சம் கடினம் தான் எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே, சந்தை கடந்த நவம்பர் 08 முதல் இன்று வரை இறங்கிக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸ் 40,000 புள்ளிகளை உடைத்துக் கொண்டு வர்த்தகம் நிறைவடையாத வரை சிக்கல் இல்லை. சரி நாளைய கதைக்கு வருவோம்.

ஒருவேளை, நாளை ஏதாவது நெகட்டிவ் செய்தி வந்து, சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 40,000 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பின், அடுத்த வலுவான சப்போர்ட்டாக 39,850 புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம்.

திங்கள் மாலை சென்செக்ஸ் 40,345 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,346 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,116 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 229 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.

இன்று காலை நிஃப்டி 11,908 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,840 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 73 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 05 பங்குகள் ஏற்றத்திலும், 25 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,738 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 957பங்குகள் ஏற்றத்திலும், 1,613 பங்குகள் இறக்கத்திலும், 168 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,738 பங்குகளில் 72 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 140 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் வர்த்தகமாயின. பொதுத் துறை வங்கி, மீடியா, மெட்டல் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின.

பிரிட்டானியா, டிசிஎஸ், ரிலையன்ஸ், நெஸ்ட்லே, பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், கெயில், ஜி எண்டர்டெயின்மெண்ட், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+