அந்தோ 1000 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்! என்ன காரணம்?

பிப்ரவரி மாத தொடக்கத்தில் சென்செக்ஸ் மீண்டும் 37,500 புள்ளிகளைத் தொடலாம் எனச் சொல்லி இருந்தால் எல்லோரும் சிரித்து இருப்பார்கள்.

ஆனால் இன்று சென்செக்ஸ் உண்மையாகவே, 37,500 என்கிற வலுவான சப்போர்ட் புள்ளிகளை உடைத்துக் கொண்டு கீழே சரிந்து கொண்டு இருக்கிறது.

தற்போது சென்செக்ஸ் சுமாராக 1095 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. மற்ற சந்தை சார்ந்த விவரங்கள் மற்றும் சந்தை சரிவு சார்ந்த காரணங்களை விரிவாகப் பார்ப்போம்.

பயங்கர சரிவு

பயங்கர சரிவு

நேற்று மாலை சென்செக்ஸ் 38,470 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 37,613 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ். இன்றைக்கு குறைந்தபட்சமாக 37,011 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிறது. இப்போது சுமாராக 37,375 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக சுமார் 1,095 புள்ளிகள் சரிவில் இருக்கிறது சென்செக்ஸ்.

ஏன் சரிவு

ஏன் சரிவு

மத்திய ரிசர்வ் வங்கி, யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் எனச் சொன்னது சந்தையில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 73.74-க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது போக சென்செக்ஸ் 30-ல் பட்டியலிடப்பட்டு இருக்கும் அதிக வெயிட்டேஜ் உள்ள பங்குகளே சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பதால் சென்செக்ஸும் சரிந்து கொண்டு இருக்கிறது.

அமெரிக்கா & ஐரோப்பா சந்தைகள்

அமெரிக்கா & ஐரோப்பா சந்தைகள்

நேற்று (மார்ச் 05, 2020) அமெரிக்காவின் நாஸ்டாக் 3.10 % சரிவு, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.62 % சரிவு, பிரான்ஸின் சி ஏ சி 1.90 % சரிவு, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 1.51 % சரிவு என ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள் எல்லாமே சரிந்து இருக்கின்றன. அவர்களே சரியும் போது ஆசிய சந்தைகளும் சரியத் தானே செய்யும்.

ஆசிய சந்தைகள் இன்று

ஆசிய சந்தைகள் இன்று

இன்று மார்ச் 06, 2020, ஆசியாவில் அனைத்து சந்தைகளும் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி 3.35 % சரிந்து இருக்கிறது. குறைந்து அளவு சரிவு கண்டு இருக்கும் சந்தை என்றால், அது சீனாவின் ஷாங்காய் காம்பொஸைட் தான். இந்த சந்தை -0.98% சரிந்து இருக்கிறது.

பெரிய சரிவில் நிஃப்டி

பெரிய சரிவில் நிஃப்டி

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி நேற்று மாலை, 11,269 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை நிஃப்டி 10,942 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. இன்றைக்கு குறைந்தபட்சமாக 10,827 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. ஆனால் தற்போது கொஞ்சம் தேறி 10,926 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக சுமார் 342 புள்ளிகள் சரிவில் இருக்கிறது நிஃப்டி.

30 பங்குகள்

30 பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 00 பங்குகள் ஏற்றத்திலும், 30 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,875 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 223 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 1,579 பங்குகள் இறக்கத்திலும், 73 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

தரை தட்டும் பங்குகள்

தரை தட்டும் பங்குகள்

மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் ஒட்டு மொத்த 1,875 பங்குகளில், 11 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 416 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஏற்ற இறக்கம்

ஏற்ற இறக்கம்

ஏற்கனவே மேலே சொன்னது போல முக்கிய பங்குகள் எதும் ஏற்றத்தில் வர்த்தகமாகவில்லை. யெஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், டாடா மோட்டார்ஸ், எஸ் பி ஐ, இ எண்டர்டெயின்மெண்ட் போன்ற பங்குகள் பெரிய விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+