கடந்த பிப்ரவரி 20, 2020 அன்று சென்செக்ஸ் உச்சப் புள்ளியாக 41,399-ஐத் தொட்டது. அந்த புள்ளியில் இருந்து இன்றைய குறைந்த புள்ளியான 39,423 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
ஆக 41,399 - 39,423 = 1,976 புள்ளிகள் சரிவைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ். போகிற போக்கைப் பார்த்தால், சென்செக்ஸின் அடுத்த வலுவான புள்ளியாக இருக்கும் 39,500-ஐ கூட தாக்கு பிடிக்க முடியாமல் இறங்கிவிடுமோ என்கிற பயம் கொஞ்சம் சந்தையில் படரத் தொடங்கி இருக்கிறது.

ஏற்கனவே பங்குச் சந்தை செய்திகள், கடந்த பிப்ரவரி 01, 2020 அன்று சென்செக்ஸ் 40,000 புள்ளிகளை உடைத்துக் கொண்டு இறக்கத்தில் நிறைவடைந்த போதே 40,000 வலுவிழப்பதாகச் சொல்லி எச்சரித்து இருந்தோம். நேற்று மீண்டும் 40,000 புள்ளிகளுக்கு கீழ் சென்செக்ஸ் நிறைவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை சென்செக்ஸ் 39,888 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 39,947 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ். இன்றைக்கு குறைந்தபட்சமாக 39,423 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. இப்போது சுமாராக 39,660 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக 228 புள்ளிகள் சரிவில் இருக்கிறது சென்செக்ஸ்.
நேற்று மாலை சென்செக்ஸ் 39,888 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 39,947 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ். இன்றைக்கு குறைந்தபட்சமாக 39,423 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. இப்போது சுமாராக 39,660 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக 228 புள்ளிகள் சரிவில் இருக்கிறது சென்செக்ஸ்.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 07 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,476 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 680 ஏற்றத்திலும், 1,649 பங்குகள் இறக்கத்திலும், 140 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் மொத்த 2,476 பங்குகளில், 49 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 269 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
சன் பார்மா, டைடன் கம்பெனி, யெஸ் பேங்க், பார்தி இன்ஃப்ராடெல், மாருதி சுசூகி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. விப்ரோ, ஐ ஓ சி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், பிரிட்டானியா, இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications