இந்திய முதலீட்டாளர்கள் பல எதிர்பார்ப்புடன் திங்கட்கிழமை வர்த்தகத்தை எதிர்கொண்ட நிலையில், வியக்கவைக்கும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது சென்செக்ஸ் அசத்தியுள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீடு 590 புள்ளிகள் வரையில் உயர்ந்து 42,566.34 புள்ளிகள் என்ற புதிய வரலாற்று உச்சத்தை அடைந்த நிலையில் வர்த்தகம் முடியும் தருவாயில் சென்செக்ஸ் குறியீடு 751 புள்ளிகள் வரையில் உயர்ந்து 42,645.33 புள்ளிகளைத் தொட்டு ஓரே நாளில் 2வது புதிய உச்சத்தைத் தொடுத்துள்ளது சென்செக்ஸ்.
இதேபோல் நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தகத்தில் 210 புள்ளிகள் வரையில் உயர்ந்து சுமார் 12,474.05 புள்ளிகளை அடைந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
30 நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டின் 30 நிறுவனங்கள் பட்டியலில், வங்கித்துறை பங்குகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாக இண்டஸ்இந்த, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை 4 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.
மேலும் 30 நிறுவனங்கள் பட்டியலில் பஜாஜ் பின்சர்வ், ஐடிசி, மாருதி மட்டுமே சரிவடைந்துள்ளது.
முக்கியக் காரணம்
இன்றைய வர்த்தக வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது அமெரிக்க அதிபர் தேர்தலும், அதனால் ஆசியச் சந்தையில் ஏற்பட்ட தாக்கமும் தான். இதோடு நாட்டின் உற்பத்தித் துறை, சேவைத் துறை, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி என அனைத்தும் சிறப்பாக இருக்கும் காரணத்தாலும் இந்தியச் சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் அதிகளவிலான முதலீட்டை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.
அமெரிக்கா தேர்தல் முடிவுகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும், இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தைக்குச் சாதகமாகவே ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் தளர்வு, GSP தகுதியை மீண்டும் கொடுக்கப் பேச்சுவார்த்தை, எல்லை பாதுகாப்பில் இந்தியா- அமெரிக்கா இடையேயான நட்புறவு ஆகியவை திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் பெரிய அளவில் பிரதிபலித்துள்ளது.
சர்வதேச சந்தை
அமெரிக்கப் பங்குச்சந்தையில் நான்கு நாள் தொடர்ந்து அதிகளவிலான வளர்ச்சியை அடைந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை கணிசமான வர்த்தக உயர்வை மட்டுமே பதிவு செய்திருந்தாலும், ஆசிய சந்தையில் இதன் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் சந்தைகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
அன்னிய முதலீடு
இதுமட்டும் அல்லாமல் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் இந்தியா - அமெரிக்க மத்தியில் நட்புறவு சிறப்பாக இருந்த காரணத்தால் அக்டோபர் மாதம் முழுவதிலும் FPI முதலீட்டாளர்கள் வெறும் 22,033 கோடி ரூபாய் தொகை மட்டுமே முதலீடு செய்திருக்கும் நிலையில் நவம்பர் மாதத்தின் வெறும் 5 நாட்கள் வர்த்தகத்தில் 8,381 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications