பங்குச் சந்தை குறியீடு எப்போதெல்லாம் அதன் உச்ச அளவீட்டை தாண்டுகிறதோ ரீடைல் முதலீட்டாளர்கள், குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் மத்தியில் சில முக்கியமான கேள்விகள் எழும்.
தற்போதைய முதலீட்டைத் தாண்டி நாம் வேறு ஏதாவது செய்ய வேண்டுமா? எதையாவது விற்கலாமா அல்லது விற்கலாமா? தங்களது முதலீட்டைப் பாதுகாப்பது எப்படி..? கூடுதல் வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ளதா..? ஆகிய கேள்விகள் எழும்.
டாப் 5 பொருளாதார நாடுகள்
உலகின் டாப் 5 பொருளாதார நாடுகளில் அடுத்த ஒரு வருடத்தில் ஆரோக்கியமான 6 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைய இந்தியாவுக்கு மட்டுமே அதிக வாய்ப்புள்ளது எனப் பல முன்னணி சந்தை முதலீட்டாளர்கள், நிதி அமைப்புகள் கணித்துள்ளது.
இரட்டை இலக்க வருவாய் வளர்ச்சி
இதன் மூலம் மற்ற பெரிய பொருளாதார நாடுகளுக்கு எதிராக இந்தியாவின் பங்குச் சந்தையின் வலிமையை இது முக்கியமாக விளக்குகிறது. மேலும் ஜிஎஸ்டி வசூல், கச்சா எண்ணெய் மற்றும் நுகர்வோர் பொருட்களின் விலையில் சரிவு, வங்கித் துறையின் நிதி நிலை மற்றும் ஆரோக்கியம் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரட்டை இலக்க வருவாய் வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்படுவதால் இந்திய சந்தை மிகவும் பிரகாசமாக உள்ளது.
பெரும்பாலான முதலீட்டாளர்கள்
இந்த நிலையில் பெரும்பாலான முதலீட்டாளர்களுக்குத் தங்களது முதலீட்டு மேனேஜர்கள் கூறுவது ஒன்று தான், பங்குச்சந்தையில் ஏற்படும் தினசரி மாற்றம் அனைத்தும் இன்ட்ரா டே முதலீட்டாளர்களுக்குத் தான், மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது ஒன்று தான் எதற்காக முதலீடு செய்கிறோம்..? எதில் முதலீடு செய்கிறோம்..? என்பதற்கான விடையைத் தெரிந்துகொண்டாலே போதுமானது முதலீட்டு மேனேஜர்கள் கூறுகின்றனர்.
போர்ட்போலியோ
சென்செக்ஸ் குறியீடு உச்சத்தைத் தொட்டு இருக்கும் நிலையில் அனைத்து மியூச்சவல் பண்ட் முதலீட்டாளர்களும், தங்களது போர்ட்போலியோவை சரி பார்க்க வேண்டும், நீண்ட கால அடிப்படையில் முதலீடுகள் பிரித்துப் பல துறைகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாக என்பதை உறுதி செய்ய வேண்டும்.
முதலீடுகள்
மேலும் அடித்த ஒரு வருடத்திற்கு உலக நாடுகளைக் கட்டிலும் இந்தியாவின் வளர்ச்சிக்குக் கூடுதல் வாய்ப்புகள் உள்ளதால், முதலீடுகளும் அதிகமாகக் குவிய வாய்ப்புகள் அதிகம், இந்த நிலையில் மியூச்சவல் பண்ட் முதலீட்டாளர்கள் திட்டமிட்டு தங்களது முதலீட்டை விரிவாக்கம் செய்ய நல்ல வாய்ப்ப அமையும், இல்லையெனில் தற்போது நீங்கள் செய்யும் முதலீட்டுத் திட்டத்தை வலிமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பெடரல் ரிசர்வ்
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் சமீபத்திய கூட்டத்தின் முடிவில் பெஞ்ச்மார்க் விகிதத்தை முன்பு போல் வேமாக உயர்த்தாமல் குறைவான வேகத்தில் தான் உயர்த்தும், இதேபோல் எவ்வளவு உயர்த்தும் என்பதைக் கணிக்க முடியவில்லை எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை
தொடர்ந்து சரிந்து வரும் கச்சா எண்ணெய் விலை முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ரஷ்ய கச்சா எண்ணெய் மீது விதிக்கப்பட உள்ள விலை, மற்றும் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது முக்கியமான காரணமாகும்.
சென்செக்ஸ்
30 நிறுவனங்கள் அடங்கிய S&P இன்டெக்ஸ் வியாழக்கிழமை வர்த்தகத்தில் 62,412.33 புள்ளிகளைத் தொட்டு, அக்டோபர் மாதம் 19ஆம் தேதியன்று எட்டிய 62,245 புள்ளிகள் சாதனை முறியடித்துப் புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டது.
நிஃப்டி
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தடுமாற்றத்தில் இருக்கும் சென்செக்ஸ் 62447.73 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. இதற்கிடையில், நிப்டி குறியீடு இன்று 2.15 சதவீதம் அதிகரித்து 18,533.15 புள்ளிகள் என்ற வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications