பங்குச் சந்தையில் கடந்த சில மாதங்களாக ஏற்றமான போக்குகள் காணப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அமெரிக்க ஃபெட் ரிசர்வ் வட்டியை குறைத்ததையடுத்து பங்குச் சந்தை குறியீடுகள் புதிய சாதனைகள் படைத்தது. அந்த வகையில், தற்போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 45 ஆண்டுகளில் சுமார் 850 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. இதன் சராசரி வருடாந்திர வளர்ச்சி வகிதமானது (CAGR) 16%ஆக உயர்ந்துள்ளது.
1979 ஏப்ரலில் சென்செக்ஸ் தொடங்கப்பட்ட காலத்தில் ரூ.1 லட்சம் முதலீடு என்பது சிறிய தொகையாக இல்லாவிட்டாலும், இப்போது அதன் மதிப்பு ரூ.8.5 கோடியாக வளரும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. சிறப்பான வருடாந்திர வளர்ச்சிய எட்டியுள்ள சென்செக்ஸ் இந்திய பங்குச் சந்தைகளின் இதய துடிப்பாக திகழ்கிறது. இது கடந்த 45 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 850 மடங்கு வருமானம் கொடுத்துள்ளது.

இந்த வாரம் பங்குச் சந்தைகளில் சாதகமான சூழல் நிலவி வருவதால் சென்செக்ஸ் சுமார் 85,000 என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தது. தற்போது 1 லட்சத்தை நெருங்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. இதே போன்ற சிஏஜிஆருடன் சென்செக்ஸிற்கு சாதகான சூழல் அமைந்தால் 2025ம் நிதியாண்டில் டிசம்பரில் 1,00,000 என்ற மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளது.
2025ஆம் ஆண்டிற்குள் சென்செக்ஸ் 1 லட்சத்தை நெருங்கிவிட்டதால் வலுவான பணப்புழக்கம் மற்றும் எஃப்ஐஐ முதலீடுகள் அதிகளவில் இருக்கும் எனவே இது வளர்ச்சியைத் தூண்டும் என்று சந்தை வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேபோல், 1,00,000 என்ற நிலையை எட்டுவதற்கு சென்செக்ஸ் இப்போது மேலும் 17.5% முன்னேற வேண்டும் என கூறுகின்றனர்.
Dezerv இன் இணை நிறுவனர் வைபவ் போர்வால் கூறுகையில், தற்போதைய சந்தை நிலைகள் சந்தை அடிப்படைகள் மற்றும் பணப்புழக்கங்களின் பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதாகவும், அதன்படி சந்தை ஆண்டுக்கு 12-15% வருமானத்தை வழங்க வேண்டும். அப்போது சந்தைகள் இந்த நிலைகளை அடைய 18-24 மாதங்கள் எடுக்கலாம் என்று கூறியுள்ளார். தற்போது வலுவான நிலை உள்ளது எனவே, பணப்புழக்க அதிகரிப்பால், சந்தையில் வாங்கும் வேகம், விரைவில் 1 லட்சம் எண்ணிக்கையை நாம் காணலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், சில்லறை விற்பனையானது சென்செக்ஸ் 1 லட்சத்தை எட்டுவதற்கு போதுமானதாக இருக்காது. ப்ளூசிப்களின் அடுத்த கட்ட பேரணி வங்கிகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் வழிநடத்தப்படும்.
2023ம் ஆண்டில் உள்ள ரூ. 1.7 லட்சம் கோடியுடன் நிஃப்டியின் மார்க்கெட் கேப் 1.2% ஒப்பிடும்போது, காலண்டர் ஆண்டில் இதுவரை எஃப்ஐஐகள் சுமார் ரூ.92,000 கோடி முதலீடு செய்துள்ளனர். எஃப்ஐஐயின் வரத்து குறைவதும், அவற்றின் மலிவான மதிப்பீட்டின் காரணமாக வளர்ந்து வரும் பிற சந்தைகளுக்கு நிதியை மாற்றுவது போன்ற ஆபத்தும் உள்ளது என்று எலிக்சிர் ஈக்விடீஸின் இயக்குனர் திபன் மேத்தா கூறியுள்ளார்.
இதற்கிடையில், கடந்த மாதம், மியூச்சுவல் ஃபண்டுகள் ரூ.1.86 லட்சம் கோடி அளவுக்கு பணத்தை குவித்து இருப்பதாகவும், இந்த முதலீடுகள் போர்ட்ஃபோலியோ மேலாளர்கள் முதலீடு செய்வதற்கான அதிக பணப்புழக்கத்தை பெற்றுள்ளதாகவும், அதேபோல், சில்லறை முதலீட்டாளர்கள், நாடு முழுவதிலுமிருந்து இளம்வயதினர் பங்குகளில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். எனவே இது முதலீட்டாளர்களின் ஆர்வம் மற்றும் பணப்புழக்கத்தின் அதிகரிப்பை வெளிப்படுத்துகிறது என்று மேத்தா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications