இன்றும், சென்செக்ஸ்ஸை தூக்கி நிறுத்தும் விதமாக நம்மிடம் எந்த ஒரு பெரிய மேக்ரோ பொருளாதார விஷயங்களும் இல்லை. ஆனால், தனிப்பட்ட பல பங்குகளின் விலை, இன்று சென்செக்ஸை உயர்த்திப் பிடித்துக் கொண்டு இருக்கின்றன. அதோடு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.80-க்கு வர்த்தகமாகி வருவது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60.42 டாலருக்கு வர்த்தகமாகி வருவது என சர்வதேச சூழல்களும் பெரிய புயலைக் கிளப்பாமல் அமைதியாக இருக்கிறது.
இன்று சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் வர்த்தகமாகும் இன்ஃபோசிஸ், எஸ் பி ஐ, டாடா மோட்டார்ஸ், சன் பர்மா என சில பங்குகள் நல்ல விலை ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் அதிக வெயிட்டேஜ் கொண்ட டாப் 5 பங்குகளான ஹெச் டி எஃப் சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச் டி எஃப் சி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய ஐந்து பங்குகளில் ரிலையன்ஸ் தவிர, மற்ற நான்கு பங்குகளும் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,051 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 40,211 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆக வர்த்தகம் தொடங்கும் போதே சுமார் 150 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. அந்த ஏற்றம் இப்போதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான அதிகபட்ச புள்ளியாக 40344 லெவல்களைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து சுமார் 295 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.
பங்குகளின் ஏற்றத்தால் தான் சென்செக்ஸ் தன் புதிய வாழ் நாள் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு சென்செக்ஸில் வர்த்தகமாகும் பங்குகளின் நிலையைப் பார்த்தாலே புரியும்.
தற்போது சென்செக்ஸில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் 30 பங்குகளில் 20 பங்குகள் ஏற்றத்திலும், 10 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. இன்று நிஃப்டியில் வர்த்தகமாகும் 50 பங்குகளில் 34 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும், ஒரு பங்கு விலை மாற்றம் இன்றியும் வர்த்தகமாகின்றன. பி.எஸ்.இ-யில் 2,227 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,398 பங்குகள் ஏற்றத்திலும், 725 பங்குகள் இறக்கத்திலும், 104 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. மொத்தம் 2,227 பங்குகளில் 61 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 83 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
தற்போது நிஃப்டி இண்டெக்ஸ்களில் அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களளும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மீடியா, ஐடி, பொதுத் துறை வங்கிகள், ஐடி போன்ற துறை இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாகி மொத்த சந்தையையும் மேலே ஏற்றிக் கொண்டு இருக்கின்றன.
ஜி எண்டர்டெயின்மெண்ட், இன்ஃபோசிஸ், எஸ்பிஐ, கெயில், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. பார்தி இன்ஃப்ராடெல், டாடா ஸ்டீல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டெக் மஹிந்திரா, ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இதே போக்கில் போனால் சென்செக்ஸ் கூடிய விரைவில் 40,500-ஐக் கூட தொட்டு விடும் போலிருக்கிறது. எனவே இன்று சந்தையில் வியாபாரம் செய்யும் முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications