இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி50 திங்கள்கிழமை காலை வர்த்தகத்தில் தடாலடியான உயர்வைப் பதிவு செய்தன.
ஆனால், எல்லைப் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்தால் இந்த தடாலடி உயர்வு, தடாலடி சரிவாக மாறலாம். சென்செக்ஸ் இன்று அதிகப்படியாக 2,376 புள்ளிகள் உயர்ந்து 81,830.65 புள்ளிகளிலும், நிஃப்டி50 705 புள்ளிகள் உயர்ந்து 24,713 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.

பாகிஸ்தானுடனான பதற்றம்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சனிக்கிழமை முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதற்கு முன், கடந்த புதன்கிழமை இந்தியா பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களைத் தாக்கியது. இது, காஷ்மீரில் 26 பேரைக் கொன்ற தாக்குதலுக்கு பதிலடியாக அமைந்தது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை இந்திய இராணுவ அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு ஹாட்லைன் மூலம் பேசி போர் நிறுத்ததை உறுதி செய்து, இந்தை மீறலாள் கடுமையானபதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தனர்.
சந்தை ஏற்றம்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் காரணமாக தயக்கம் காட்டி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்று காலை முதல் அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வந்தனர். இதன் எதிரொலியாகவே மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனமும் ரூ.11.1 லட்சம் கோடி உயர்ந்து, மொத்தம் ரூ.427.49 லட்சம் கோடியாக உயர்ந்தது.
முன்னணி பங்குகள்: சென்செக்ஸ் குறியீட்டில் அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, L&T, பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், மற்றும் NTPC ஆகியவை 3-4% உயர்ந்தன. ஆனால், சன் ஃபார்மா 6% சரிவைச் சந்தித்தது, இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்காவில் டிரம்ப் மருந்துகளின் விலையை குறைக்கப்போவது தான்.
துறை வாரியாக: நிஃப்டி ஃபார்மா மற்றும் நிஃப்டி ஹெல்த்கேர் தவிர அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்தன. நிஃப்டி ஃபார்மா 2% சரிந்தது.
அதானி பவர்: உத்தரப் பிரதேசத்திற்கு 1,500 மெகாவாட் மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதானி பவர் பங்கு 7% உயர்ந்தது. இந்த பசுமை உயர்-திறன் மின்நிலைய திட்டத்திற்கு $2 பில்லியன் முதலீடு செய்யப்பட உள்ளது.
ஃபார்மா துறை சரிவு: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மருந்து விலைகளை 30% முதல் 80% வரை "உடனடியாக" குறைக்கும் திட்டத்தை அறிவித்ததை அடுத்து, நிஃப்டி ஃபார்மா குறியீடு 2% சரிந்தது. சன் ஃபார்மா, பயோகான், அரோபிந்தோ ஃபார்மா, மற்றும் க்ளென்மார்க் ஆகியவை முக்கிய இழப்புகளைச் சந்தித்தன.
ட்ரம்பின் மருந்து விலைக் குறைப்பு அறிவிப்பு இந்திய ஃபார்மா நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைவதால், ஃபார்மா நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்படலாம். இதனால், முதலீட்டாளர்கள் ஃபார்மா பங்குகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர், இது நிஃப்டி ஃபார்மா குறியீட்டின் சரிவுக்கு வழிவகுத்தது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல், கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையானதாக இருந்தது. இந்தப் பதற்றத்தின் தாக்கம் பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. தற்போதைய போர் நிறுத்தம் சந்தைக்கு நம்பிக்கையை அளித்திருந்தாலும், எல்லைப் பதற்றம் மீண்டும் உருவானால், இந்த உயர்வு மாயமாகலாம்.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications