இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இன்றைய (வியாழக்கிழமை) வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் புதிய உச்சத்தைத் தொட்டு பங்குச்சந்தை முதலீட்டாளர்களைப் பணக்காரர்களாக்கியுள்ளது. அமெரிக்கப் பத்திர சந்தையிலிருந்தும் ஐரோப்பிய பத்திர சந்தையிலிருந்து வெளியேறும் பணத்தை இந்திய பட்ஜெட் வெளியிடுவதன் வாயிலாக இந்திய பங்குச்சந்தைக்கு ஈர்க்கப்பட்டு உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 81,000 புள்ளிகளை கடந்து 81485.9 புள்ளிகள் என்ற வரலாற்று உச்சத்தையும், நிஃப்டி 50 குறியீடு 24,700 புள்ளிகளையும் தாண்டி முதல் முறையாக 24,829.35 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் இன்று சுமார் 0.9% வரையில் உயர்ந்துள்ளன.

இன்றைய உயர்வுக்கு தகவல் தொழில்நுட்ப (IT) பங்குகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இந்தியாவின் முன்னணி இரண்டு IT நிறுவனங்களான TCS மற்றும் HCL டெக் ஆகியவை ஜூன் காலாண்டில் சிறப்பான செயல்பாட்டை வெளியிட்டதைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் IT பங்குகளில் நம்பிக்கை அடைந்துள்ளனர். இதேபோல் இன்று இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் இன்று தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது.
இதனால் இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி IT குறியீடு தொடர்ச்சியாக நான்காவது நாளாக உயர்ந்து புதிய உச்சமான 39,905 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் இன்று டிசிஎஸ், இன்போசிஸ் ஆகியவை புதிய 52 வார உச்சத்தை தொட்டுள்ளது.
நிஃப்டி 50 குறியீட்டில் உள்ள எட்டு நிறுவனங்களில் நான்கு IT நிறுவனங்கள் இன்று 52 வார உச்சத்தைத் தொட்டுள்ளன. டெக் மஹிந்திரா, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், HUL, ONGC, விப்ரோ, இன்போசிஸ், TCS மற்றும் SBI லைஃப் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இன்று புதிய 52 வார உச்சத்தை எட்டியுள்ளன.
மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸ் அதிகப்படியாக 3.25 சதவீதம் அதிகரித்துள்ளது. பஜாஜ் பின்சர்வ், மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் டாடா ஸ்டீல், என்டிபிசி, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, அதான் போர்ட்ஸ் ஆகியவை சரிவில் உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 3 மணி அளவில் மும்பை பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 454 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications