பட்ஜெட்டிற்கு பின் அதல பாதாளத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!! பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரத்த கண்ணீர்!!

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஓராண்டு காலமாகவே வீழ்ச்சியிலேயே இருக்கின்றன. எனவே பங்குச்சந்தைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என லட்சக்கணக்கான பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அவர் வெளியிட்ட சில அறிவிப்புகள் பங்குச்சந்தையை பெருமளவு வீழ்ச்சியடைய செய்துள்ளன. குறிப்பாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலை 82,400 புள்ளிகளுக்கும் மேல் வர்த்தகத்தை தொடங்கியது 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தபோது 82,700 புள்ளிகளை கடந்து வர்த்தகமானது. ஆனால் அதன்பின்னர் படிப்படியாக சரிந்த சென்செக்ஸ் குறியீடு அதிரடியாக 79,900 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெருமளவிலான நஷ்டத்தை ஏற்படுத்தி தந்தது. அதாவது சுமார் 2000 புள்ளிகள் சரிவை கண்டது. தற்போது பங்குச்சந்தை படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்து 81,450 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

பட்ஜெட்டிற்கு பின் அதல பாதாளத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!! பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரத்த கண்ணீர்!!

அடுத்ததாக தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்றைய தினம் பெரிய சரிவை கண்டது. காலை பங்கு வர்த்தகம் தொடங்கியபோது நிஃப்டி 25,330 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் தொடங்கிய போது 25,440 புள்ளிகள் வரை எட்டியது. ஆனால் அதன் பின்னர் சடாரென சரிந்து 24,600 புள்ளிகளுக்கும் கீழ் சென்றுவிட்டது. தற்போது தேசிய பங்கு சந்தை மீண்டும் வந்து 25,081 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய பங்குச்சந்தை எதிர்பார்த்த பெரிய அளவிலான அறிவிப்புகள் வராதது ஒரு காரணம். அதே போல பியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்(futures & Options) வர்த்தகத்தை கட்டுப்படுத்த எஸ்டிடி வரியை உயர்த்தி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக பங்குச்சந்தை மளமளவென சரிந்து விட்டது.

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்திற்கான எஸ்டிடி வரி 0.02 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது ஆப்ஷன்ஸ் வர்த்தகத்திற்கா வரி 0.02 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தினந்தோறும் ஆப்ஷன் டிரேடிங், உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவர்களுக்கு கிடைக்கக்கூடிய நிகர லாபத்தில் பெரிய பாதிப்பை இது ஏற்படுத்தும். இதனால் அதிருப்தி அடைந்து முதலீட்டாளர்கள் பணத்தை திரும்ப எடுத்ததன் காரணமாக பங்குச்சந்தை பெரிய அளவில் சரிந்து இருக்கிறது.

ஃபியூச்சர் மற்றும் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்திற்கான இந்த வரி உயர்வு என்பது தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெளியேற்ற செய்யும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக எதிர்மறையாக முதலீட்டாளர்கள் பங்குகளை பெருமளவில் விற்பனை செய்து வருகின்றனர். ஏற்கனவே நீண்டகால மூலதன் ஆதாய வரியை நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் நிர்மலா சீதாராமன் வெளியிடப்படவில்லை.

போதாக்குறைக்கு எஸ்டிடி வரியை வேறு உயர்த்தி இருக்கிறார். ஏற்கனவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறி வருகின்றனர். அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாமல் இருக்கிறது , இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த சூழல்களில் பங்குச்சந்தை அதல பாதாளத்திற்கு சென்று இருக்கும் நிலையில் அதனை சரி செய்யும் நடவடிக்கையை நிதி அமைச்சர் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காமல் போனதால் பங்குச்சந்தை ஸ்தம்பித்து போனது என கூறலாம். சில நிமிடங்களிலேயே முதலீட்டாளர்கள் சுமார் 7 லட்சம் கோடிக்கும் அதிகமான செல்வத்தை இழந்தனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+