இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாயன்று ஐந்தாவது நாளாகத் தொடர்ச்சியாகச் சரிவைச் சந்தித்து முதலீட்டாளர்களுக்கு ரத்தக்கண்ணீர் வரவழைத்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் வங்கி, ஆட்டோமொபைல், உலோகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) துறை பங்குகளில் அதிகளவிலான விற்பனையைப் பன்னாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து எதிர்கொண்டது.
ஆனால் அதானி குழும பங்குகள் மட்டும் சுனாமியில் ஸ்விம்மிங் போடுவது போல் மோசமான சரிவில் இருந்து அழகாக மீண்டு வந்துமாஸ் காட்டி வருகிறது. இதற்குக் காரணம் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டு உள்ள புதிய உத்தரவு தான்.

இன்றைய மோசமான சரிவுக்கு உள்நாட்டு நிறுவனங்களின் மோசமான காலாண்டு முடிவுகள் மற்றும் அமெரிக்க வர்த்தகக் கொள்கை தான் முக்கியமான காரணமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்க அரசின் ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருட்கள் மீதான புதிய வரி விதிப்பு உற்பத்தித் துறையை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் (BSE) சென்செக்ஸ் குறியீடு 1,227 புள்ளிகள் அதாவது 1.59% குறைந்து 76,084 புள்ளிகள் வரையில் குறைந்து வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் (NSE) நிஃப்டி50 குறியீடு பிற்பகல் 2:09 மணியளவில் 23,000 புள்ளிகளுக்குக் கீழே சரிந்தது. மேலும் இன்று ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் குறியீடுகள் முறையே 3.9% மற்றும் 3.5% சரிந்தன.
இதன் மூலம் BSE-யில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ. 9.87 லட்சம் கோடி குறைந்து ரூ. 407.95 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. மேலும் HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி போன்ற முன்னணி வங்கிகளின் பங்குகள் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் 3% வரை சரிந்து, சென்செக்ஸின் ஒட்டுமொத்த சரிவுக்கு 270 புள்ளிகள் வரை பங்களித்தன.
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு எதிரான அமெரிக்காவில் சமீபத்தில் லஞ்சம் கொடுத்து வர்த்தகத்தைக் கைப்பற்றியதாகக் குற்றச்சாட்டு உடன் வழக்கு தொடுக்கப்பட்டது Foreign Corrupt Practices Act - FCPA சட்டத்தின் கீழ் தான்.
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் இன்று FCPA சட்டத்தின் பயன்பாட்டை 180 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது மட்டும் அல்லாமல், மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்படும் ஆணையில் கையெழுத்திட்டு உள்ளார். இது அதானி குழுமத்திற்கு ஒரு தற்காலிக நிவாரணமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் 2 முக்கியமான நிறுவனப் பங்குகள் உயர்வுடன் உள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் - 1.48 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் & SEZ - 0.49 சதவீதம் சரிவு
அதானி பவர் - 1.65 சதவீதம் உயர்வு
அதானி எனர்ஜி சொல்யூஷன் - 0.92 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 0.26 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 1.73 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 5.15 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 1.29 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 1.27 சதவீதம் உயர்வு
NDTV - 0.86 சதவீதம் உயர்வு
சங்கி இண்டஸ்ட்ரீஸ் - 2.31 சதவீதம் சரிவு
More From GoodReturns

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications