இந்திய பங்கு சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று வலுவான உயர்வை பதிவு செய்து முதலீட்டாளர்களை மனம் குளிரவைத்துள்ளது. உலகளாவிய போர் மற்றம் பொருளாதார அச்சங்கள் குறைந்து வரும் காரணத்தால் முதலீட்டாளர்களுக்கு இந்திய சந்தை மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் துவங்கி டிரம்ப்-ன் இந்தியா மீதான கூடுதல் வரிகளை மறுபரிசீலனை செய்வது வரையில் பல முக்கியமான காரணத்தால் இன்று சென்செக்ஸ், நிஃப்டி அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்செக்ஸ் குறியீடு கடந்த வாரம் வியாழக்கிழமை முடிந்த 80,597.66 புள்ளிகளில் இருந்து 81,315.79 புள்ளிகளில் தொடங்கி சுமார் 1,100 புள்ளிகள் உயர்ந்து 81,765.77 என்ற உச்சத்தை எட்டியது.
இதேபோல் நிஃப்டி 50 குறியீடு, 24,631.30 புள்ளிகளில் கடந்த வாரம் முடிந்து இன்று 24,938.20 புள்ளிகளில் துவங்கி தற்போது 1.6 சதவீதம் உயர்ந்து 25,022 என்ற உச்சத்தை தொட்டது.
இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.445 லட்சம் கோடியிலிருந்து ரூ.450 லட்சம் கோடிக்கு உயர்ந்து, முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இன்றைய அதிரடியான உயர்வுக்கு 5 முக்கிய காரணங்கள் இது தான்.
GST மறுசீரமைப்பு அறிவிப்பு
சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த தலைமுறை GST மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அறிவித்தார், இது மக்களுக்கு தீபாவளி போனஸாக அமையும் என்று குறிப்பிட்டார். இந்த மாற்றம் மூலம் தற்போதைய 12% மற்றும் 28% விகிதங்களில் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை 5% மற்றும் 18% விகிதங்களுக்கு மாற்றப்பட உள்ளது. இதன் மூலம் இனி 4 ஜிஎஸ்டி பலகை முறை நீக்கப்பட்டு 2 பலகை மட்டுமே இருக்கும். இதோடு 0 சதவீதமும், மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிப்பு மட்டும் இருக்கும், 12% மற்றும் 28% பலகை நீக்கப்படும்.
உலக அரசியல் அச்சங்கள் குறைவு
அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை திங்கட்கிழமை சந்திக்க உள்ளார், இது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்பைத் தொடர்ந்து நடைபெறுகிறது. டிரம்ப்-புடின் சந்திப்பில் உக்ரைன் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாவிட்டாலும், ஜெலென்ஸ்கி சந்திப்பில் நேர்மறையான முடிவு வரலாம் என்ற எதிர்பார்ப்பு சந்தையை உயர்த்தியுள்ளது. மேலும் டிரம்ப்-புடின் சந்திப்பின் மூலம் அமெரிக்கா - ரஷ்யா மத்தியிலான உறவு மேம்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் ஆசியவில் நிலவும் போர் பதற்றம் குறைய வாய்ப்புள்ளது.

S&P கடன் மதிப்பீடு உயர்வு
S&P குளோபல் இந்தியாவின் சார்வரிக் கடன் மதிப்பீட்டை BBB-இலிருந்து BBBயாக உயர்த்தியுள்ளது, இது 2007க்குப் பின்பு முதல் முறையாக கடன் மதிப்பீடு உயர்ந்துள்ளது. குறுகிய கால மதிப்பீடு A-3இலிருந்து A-2ஆகவும், இடமாற்ற மதிப்பீடு BBB+இலிருந்து A-ஆகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளையும், நிலையான பொருளாதார கண்ணோட்டத்தை.
டிரம்பின் வரி மறுபரிசீலனை
இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்காக டிரம்ப் இந்தியா மீது மட்டும் குறிவைத்து 25 சதவீத கூடுதல் வரியை விதித்தது. இது டிரம்ப்- புடின் சந்திப்பிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் பேசுகையில் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இந்த வரி விதிப்பை மறுபரிசீலனை செய்யலாம் என பேசினார்.
இந்த மறுபரிசீலனையில் இந்தியா மீதான வரியை அபராத வரியாக விதித்த 25 சதவீத வரியை மொத்தமாக நீக்கினால் இந்திய பொருளாதாரத்திற்கு ஜாக்பாட் ஆக அமையும்.
வருவாய் மீட்சி எதிர்பார்ப்பு
இந்திய பொருளாதாரம் தற்போது நிலையான வளர்ச்சியில் உள்ளது இதேபோல் பணவீக்கமும் குறைந்து வருகிறது. இதனால் இந்திய மக்கள் 2025ஆம் ஆண்டின் அடுத்த 4 மாதங்களுக்கு அதிகளவிலான பொருட்களை வாங்குவார்கள், இதன் மூலம் நாட்டின் வர்த்தகம் மேம்படும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
இதன் மூலம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் வருவாய் மீட்சி ஏற்படும் என்று சந்தை எதிர்பார்க்கிறது. மோதிலால் ஓஸ்வால் போன்ற தரகு நிறுவனங்கள், GST மறுசீரமைப்பு, S&P உயர்வு மற்றும் அமெரிக்க வரி மீதான மறுஆய்வு ஆகியவை பங்குச்சந்தை முதலீட்டு உணர்வை மேம்படுத்தியுள்ளதாக கூறுகின்றன.
More From GoodReturns

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!



Click it and Unblock the Notifications