41,000 தொட்டு முடிந்த சென்செக்ஸ்..! 12,075-ஐக்கு மேல் நிறைவடைந்த நிஃப்டி..!

இன்று காலை சொன்னது போலவே, நுகர்வோர் பணவீக்கம், தொழில் துறை உற்பத்தி, ஜிடிபி கணிப்புகள் போன்ற செய்திகள் இன்றைய சந்தையை அதிகம் பாதிக்கவில்லை. இவ்வளவு பலமான பொருளாதார செய்திகள் வந்தாலும் இன்று சென்செக்ஸ் 428 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. எனவே இன்று சந்தையில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் செண்டிமெண்ட் பாசிட்டிவாக இருந்ததையே இது பிரதிபலிக்கிறது.

அதோடு சென்செக்ஸை டெக்னிக்கல் சார்ட்டைப் பார்த்தால், மீண்டும் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுடன் மல்லு கட்டி 41,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்து இருக்கிறது. எனவே திங்கட்கிழமை சென்செக்ஸ் மேற்கொண்டு ஏற்றம் காணலாம் என்கிறார்கள் அனலிஸ்டுகள்.

41,000 தொட்டு முடிந்த சென்செக்ஸ்..! 12,075-ஐக்கு மேல் நிறைவடைந்த நிஃப்டி..!

ஒருவேளை சந்தை மேலும் ஏற்றம் கண்டால் முதலில் 41,000 புள்ளிகளை உறுதி செய்யப்பட்டும். அதன் பிறகும் நல்ல ஏற்றம் கண்டால் 41,150 வலுவான ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம். 41,150 புள்ளிகளை எளிதில் கடந்துவிட்டல், அடுத்து 41,700 புள்ளிகளைக் கூடத் தொடலாம் என்கிறது சென்செக்ஸின் டெக்னிக்கல் சார்ட். ஒருவேளை ஏதாவது நெகட்டிவ் செய்தி வந்தால் 40,500 தான் முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாகத் தெரிகிறது.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,581 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,754 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,000 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய உச்சப் புள்ளி 428 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 12,026 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,086 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 24 பங்குகள் ஏற்றத்திலும், 06 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,703 பங்குகளில் வர்த்தகமாயின. அதில் 1,548 பங்குகள் ஏற்றத்திலும், 985 பங்குகள் இறக்கத்திலும், 170 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,703 பங்குகளில் 45 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 164 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஆக்ஸிஸ் பேங்க், வேதாந்தா, ஹிண்டாஒகோ, எஸ்பிஐ, கோல் இந்தியா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், பார்தி ஏர்டெல், ஜி எண்டர்டெயின்மெண்ட், கோட்டக் மஹிந்திரா பேங்க், பஜாஜ் ஆட்டோ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+