அமலாக்க துறை கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும் அவருக்கு தொடர்புடையோருக்கு சொந்தமான இடத்தில் சோதனை செய்துக்கொண்டு இருக்கும் கரூரில் முக்கிய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் முக்கிய விஷயத்தை கூறினார்.
செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடையோரின் வீடு அலுவலகம் ஆகியவைற்றில் வருமான வரித்துறை, செய்த பல கட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் இருப்பதால்தான் அமலாக்கத்துறை தற்போது சோதனையிட வந்திருக்கிறது.

வருமான வரித்துறை எந்த ஆவணம், எதுப்பற்றிய ஆவணங்களை கைப்பற்றியுள்ள என்பது எங்களுக்குத் தெரியாது. அது அமலாக்கத் துறையின் வழக்கு மூலமாகவே தெரிய வரும் என கூறினார் இராம.சீனிவாசன்.
பொதுவாக அமலாக்கத்துறை சோதனை நடந்தால், தொடர்புடையோரின் அனைத்துச் சொத்துகளும், வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும். இப்படி நடந்தால் இனி செந்தில் பாலாஜி எந்த சொத்துகளை விற்கவோ வாங்கவோ முடியாது. இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை விரைவில் எடுக்கும் என எதிர்பார்ப்தாக தெரிவித்தார் பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன்.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பு அதிமுக ஆட்சியில் 2011-ல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது இத்துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்யப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை மே மாத இறுதியில் இருந்து பல்வேறு இடத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கரூரில் அவரது சகோதரர் விட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதோடு அமலாக்க துறை தலைமைச் செயலக அலுவலகத்தில் செந்தில் பாலாஜி அலுவலகத்திலும் நேற்று நீண்ட நேரம் சோதனை நடத்தினர்.
நேற்று காலை செந்தில் பாலாஜி வாக்கிங் சென்ற நேரத்தில் அமலாக்க துறை அவரது வீட்டில் சோதனை செய்ய துவங்கியது. அமலாக்க துறையின் நீண்ட நேர சோதனைகளுக்குப் பிறகு அமலாக்க துறை விசாரணைக்கு தேவையான ஆவணங்களை கைப்பற்றிய நிலையில்..
அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு நேற்று இரவு அழைத்துச் சென்ற நிலையில் அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலிப்பதாக கதறி அழுதார் இதை தொடர்ந்து சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications