செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் வாகன விற்பனை சுமார் 20 சதவீதமாக வளர்ச்சியைக் கண்டு இத்துறை முதலீட்டாளர்களை அசத்தியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் டிராக்டர்களை தாண்டி அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் வளர்ச்சியைக் கண்டுள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இக்காலக்கட்டத்தில் டிராக்டர்களின் விற்பனை அளவு கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 10 சதவீத சரிவை கண்டது. FADA அமைப்பின் தரவுகளின் படி, இரு சக்கர வாகனங்கள் 22 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் 49 சதவீதமும், பயணிகள் வாகனங்கள் 19 சதவீதமும், வர்த்தக வாகனங்கள் 5 சதவீதமும் விற்பனையில் அதிகரித்துள்ளது.

மேலும் மாதாந்திர விற்பனை என்று வரும்போது, இந்தியாவில் ஒட்டுமொத்த விற்பனையில் ஆட்டோமொபைல் துறை ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதத்தில் 3.5 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. வருடாந்திர விற்பனை எண்ணிக்கை போலவே டிராக்டர் பிரிவின் விற்பனை 26 சதவீதம் சரிந்தது.
தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த ரீடைல் வாகன விற்பனை 14 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது ஆட்டோமொபைல் துறையின் நிலையான வளர்ச்சியை காட்டுகிறது, இதேவேளையில் இந்தியாவில் விழாக்காலம் வருகையில் இது முக்கிய காலக்கட்டமாக இருக்கபோகிறது.
செப்டம்பர் மாதத்தில் மாருதி சுசூகி 1,39,640 கார்களை விற்பனை செய்து இந்திய ஆட்டோமொபைல் துறை முன்னணியில் உள்ளது. இதேபோல் ஹூண்டாய் 49,625 கார்களையும் மற்றும் டாடா மோட்டார்ஸ் 38,984 கார்களையும் விற்பனை செய்துள்ளது.
மேலும் இரு சக்கர வாகன பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3,51,781 வாகனங்கள் விற்பனை செய்து முதலிடத்திலும், ஹோண்டா மோட்டார் 3,48,899 வாகனங்களையும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2,28,852 வாகனங்களையும் விற்பனை செய்து முதல் 3 இடங்களை பிடித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 25 கார்களின் பட்டியல்
1. மாருதி Baleno - 18,417 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
2. மாருதி Wagon R - 16,250 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
3. டாடா Nexon - 15,325 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
4. மாருதி Brezza - 15,001 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
5. மாருதி Swift - 14,703 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
6. மாருதி Dzire - 13,880 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
7. மாருதி Ertiga - 13,528 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
8. டாடா Punch - 13,036 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
9. ஹூண்டாய் Creta - 12,717 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
10. ஹூண்டாய் Venue - 12,204 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
11. மஹிந்திரா Scorpio N + Classic - 11,846 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
12. மாருதி Grand Vitara - 11,736 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
13. மாருதி Fronx - 11,455 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
14. மாருதி Eeco - 11,147 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
15. கியா Seltos - 10,558 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
16. மஹிந்திரா Bolero - 9,519 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
17. டொயோட்டா Innova Crysta + HyCross - 8,900 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
18. ஹூண்டாய் Exter - 8,647 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
19. மஹிந்திரா XUV700 - 8,555 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
20. மாருதி Alto - 7,791 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
21. டாடா Tiago - 6,789 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
22. டாடா Altroz - 6,684 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
23. ஹூண்டாய் i20 - 6,481 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
24. ஹோண்டா Elevate - 5,685 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
25. மஹிந்திரா Thar - 5,417 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications