உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நேற்று ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்
40 வயதான செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
இந்த நிலையில் ஓய்வு முடிவை அறிவித்துள்ள செரீனா, ஓய்வுக்கு பின்னர் தான் குடும்பத்திற்காக நாட்களை செலவு செய்யப் போவதாகவும் கூறினார். மேலும் ஓய்வு என்ற வார்த்தையே எனக்கு பிடிக்காது என்றும் டென்னிஸை விட்டு விலகினாலும் நான் பிசியாக தான் இருப்பேன் என்றும் கூறியுள்ளார்
செரீனா வில்லியம்ஸ்
டென்னிஸ் உலகில் இருந்து ஓய்வு பெறும் செரீனா வில்லியம்ஸ் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. செரீனா வில்லியம்ஸின் நிகர சொத்து மதிப்பு தற்போது 250 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. அவர் வருடம் ஒன்றுக்கு 30 முதல் 40 மில்லியன் டாலர் வரை டென்னிஸ் விளையாட்டில் சம்பாதிக்கிறார் என்று கூறப்படுகிறது
செரீனா வில்லியம்ஸ் வருமானம்
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2020 ஆம் ஆண்டு ஜூன் வரை செரினா வில்லியம்ஸ் 35 மில்லியன் டாலர்களை சம்பாதித்தார் என்றும், அதில் 20 மில்லியன் டாலர் டென்னிஸ் விளையாட்டு மூலமே சம்பாதித்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020 ஆம் ஆண்டில் செரினா வில்லியம்ஸ் 45 மில்லியனுக்கும் அதிகமான டாலர்கள் சம்பாதித்தார் என்றும் கூறப்படுகிறது.
ஃபோர்ப்ஸ் பட்டியல்
உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் செரீனா வில்லியம்ஸ் 31வது இடத்தில் உள்ளதாக ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செரினா வில்லியம்ஸ் மற்ற டென்னிஸ் வீராங்கனைகளை விட அதிக தொகையை டென்னிஸ் விளையாட்டில் சம்பாதித்து உள்ளார்
$94.5 மில்லியன் வருவாய்
மகளிர் டென்னிஸ் சங்கத்தின் தகவலின்படி செரீனா வில்லியம்ஸின் தற்போதைய வருவாய் $94.5 மில்லியன் ஆகும். முக்கிய டென்னிஸ் போட்டிகள் பெரும் வருவாய் ஈட்டும் திறனுடன் இருப்பதால் வரும் நாட்களில் அந்த எண்ணிக்கை எளிதாக உயரக்கூடும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் திடீரென ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்
விம்பிள்டன் டென்னிஸ்
2022ஆம் ஆண்டு ஜூனில் விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற செரீனா வில்லியம்ஸ் $2.5 மில்லியன் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றதால் அவரது பங்கு மட்டும் $662,000 என கூறப்படுகிறது. மொத்தத்தில் டென்னிஸ் வீராங்கனைகளை பொறுத்தவரை மிக அதிகமாக சம்பாதித்த வீராங்கனைகளில் ஒருவர் செரீனா வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications