பாலிவுட்-ல் கொடிக்கட்டி பறக்கும் சினிமா தயாரிப்பு நிறுவனமான கரண் ஜோஹாரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வாங்குவதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த வாரம் பேச்சுவார்த்தை துவங்கியது. இந்த நேரத்தில் சத்தமில்லாமல் நைசாக நுழைந்து கரண் ஜோஹாரின் தர்மா புரொடக்ஷன்ஸ்-ஐ கைப்பற்றியுள்ளார் அதார் பூனாவாலா.
கொரோனா காலத்தில் இந்திய மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு வேக்சின் தயாரித்து கொடுத்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் பில்லியனர் சிஇஓ அதார் பூனாவாலா, கரண் ஜோஹாரின் தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் தர்மாட்டிக் என்டர்டெயின்மென்ட்டில் 50% பங்கை ரூ.1000 கோடிக்கு கையகப்படுத்த உள்ளார்.

இந்த ஒப்பந்தம் மூலம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோகம் என பல துறையில் இயங்கி வரும் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை ரூ.2000 கோடியாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தில் கரண் ஜோஹர் 90.7% பங்குகளையும் மற்றும் அவரது தாயார் ஹிரூ ஜோஹர் 9.24% பங்குகளை வைத்துக்கொண்டு இயங்கி வருகிறது.
அதார் பூனாவாலா இந்த ஒப்பந்தத்தை நேரடியாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் வாயிலாக செய்யாமல் தனது தனியார் நிறுவனமான செரீன் புரொடக்ஷன்ஸ் (Serene Productions) நிறுவனத்தின் மூலம் இந்த முதலீட்டை செய்ய உள்ளார். இதனால் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கும் இந்த புதிய முதலீட்டுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை.
சீரம் இன்ஸ்டிடியூட் சாம்ராஜ்ஜியம் கொரோனா தொற்று காலத்தில் வேக்சின் உற்பத்தி மற்றும் விற்பனை மூலம் பெரும் பணத்தை சம்பாதித்த நிலையில் புதிதாக நிதித்துறை வர்த்தகத்தில் இறங்கியதை தொடர்ந்து தற்போது சினிமா துறையில் இறங்கியுள்ளது.
அதார் பூனாவாலா-வின் செரீன் புரொடக்ஷன்ஸ், தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை வாங்கினாலும் கரண் ஜோஹர் தான் இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக தொடர்ந்து இருப்பார், நிறுவனத்தின் படைப்பு கட்டுப்பாடு இவர் கையில் தான் இருக்கும். இதேபோல் அபூர்வா மேத்தா சிஇஓவாக தொடர்வார் என கூறப்படுகிறது.

அதார் பூனாவாலா மற்றும் கரண் ஜோஹர் இடையேயான புதிய கூட்டணி, பொழுதுபோக்குத் துறையில் குறிப்பாக பாலிவுட் திரையுலகிள் புதிய வளர்ச்சியும், புதுமையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 1000 கோடி ரூபாய் முதலீட்டை வைத்து கரண் ஜோஹர் தர்மா புரொடக்ஷன்ஸ் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், புதிய திட்டங்களில் முதலீடு செய்யவும் மற்றும் புதிய துறையில் நுழையவும் முடியும்.
இந்த கூட்டணி குறித்து இந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிபைபை அறிவிக்கப்படலாம் என கூறுப்படுகிறது.
தர்மா ப்ரோடெக்ஷன்ஸ் 2023 ஆம் நிதியாண்டில் வருவாய் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்து ரூ.1,040 கோடிக்கு எழுந்தது. இருப்பினும், செலவுகள் ரூ.1,028 கோடிக்கு 4.5 மடங்கு உயர்ந்ததால், நிகர இலாபம் 59% குறைந்து ரூ.11 கோடிக்கு குறைந்தது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications