இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சேவைத் துறையின் வளர்ச்சி விகிதமானது கொரோனா காரணமாக மோசமான பாதிப்பினைக் கண்டுள்ளது.
மனிதர்களுடன் அதிக தொடர்புடைய இந்த சேவைத் துறையானது, கொரோனாவின் காரணமாக மிக மோசமான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளது.
இதுற்கிடையில் மொத்த ஜிவிஏவில் கடந்த 2019 -20ம் ஆண்டில் 55% ஆக வளர்ச்சி விகிதமானது 2021 -22ல் 53% சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோசமாக பாதிக்கப்பட்ட துறைகள்
ஐடி துறை, நிதி துறை, தொழில்முறை மற்றும் வணிக சேவைகள் என பல சேவைத் துறைகளும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால் அதேசமயம் சுற்றுலா, சில்லறை வர்த்தகம், ஹோட்டல் வணிகம், பொழுதுபோக்கு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான வணிக சேவைகளில் மிக மோசமான தாக்கம் இருந்ததாக ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
நிச்சயமற்ற நிலை
எனினும் கடந்த ஆண்டு 8.4% வீழ்ச்சியினை தொடர்ந்து நடப்பு ஆண்டில் 8.2% வளர்ச்சி இருக்கும் என்றும் கணித்துள்ளது. இருப்பினும் தற்போது கொரோனா, ௐமிக்ரான் என தொடர்ந்து மக்களை பாடாய்படுத்தி வருகின்றன. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சமே நிலவி வருகின்றது. இதனால் நிச்சயமற்ற நிலையே இருந்து வருகின்றது.
லாக்டவுன்
மார்ச் - மே 2020ல் நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது அலையின்போது தாக்கம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே லாக்டவுன் இருந்து வந்தது. தற்போதும் கூட மூன்றாவது அலையின் காரணமாக வார விடுமுறை நாட்களில் லாக்டவுன், இரவு நேர லாக்டவுன் என பல இடங்களில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேவை துறையானது ஒரளவுக்கு மீண்டு வந்துள்ளது. இருப்பினும் இன்னும் சில சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளன.
கொரோனாவுக்கு முந்தைய நிலை
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் சேவைத் துறையானது 10.8% வளர்ச்சி கண்டது. இந்த வளர்ச்சி விகிதமானது கொரோனாவின் நிலைக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது. எனினும் தற்போது வரையில் மூன்றாவது அலையின் தாக்கம் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஹோட்டல், போக்குவரத்து, கம்யூனிகேஷன், ஓளிபரப்பு சேவைகள், டிரேடுஎன பலவும் பாதிக்கப்பட்டுத் தான் உள்ளன. இன்னும் மேற்கண்ட துறைகள் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டவில்லை. ஆக இந்த துறைகளும் மீண்டும் வரும்போது தான் சேவைத் துறையானது முழு வளர்ச்சி நிலையை எட்டும். இது வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications