சர்வதேச பொருளாதாரம் மந்தநிலைக்கு செல்லும் நிலையில், இந்திய சேவை துறை செப்டம்பர் மாதம் வர்த்தகம் மற்றும் பணிகளில் ஏற்பட்ட மந்த நிலையில் 6 மாத சரிவுக்குத் தள்ளப்பட்டது.
எஸ் அண்ட் பி குளோபல் இந்தியா சர்வீசஸ் பர்சேசிங் மேனேஜர்ஸ் குறியீடு செப்டம்பர் மாதம் 54.3 புள்ளிகளாகச் சரிந்துள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் 57.2 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகப் பொருள், 57.2 புள்ளிகளில் இருந்து 54.3 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது பெரும் சரிவாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய சேவை துறை
இந்திய சேவை துறை மார்ச் மாதத்தில் இருந்து தொடர் வளர்ச்சி பாதையில் இருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட சரிவு சர்வதேச பொருளாதார மந்த நிலையின் விளைவாக உருவானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று காலத்திலும், ரஷ்ய உக்ரைன் போர் துவங்கிய பின்பும் சரி இந்திய சேவை துறை தொடர் வளர்ச்சி பாதையில் இருந்தது.
செப்டம்பர் மாதம்
இந்திய சேவை துறை செப்டம்பர் மாதம் வரையில் சுமார் 14 மாதம் தொடர் வளர்ச்சி பாதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் விலைவாசி உயர்நு, அதிகப்படியான போட்டி மற்றும் வர்த்தக வளர்ச்சி ஒவ்வாத கொள்கை மற்றங்கள் ஆகியவை சேவை துறையைத் தலைகீழாக மாற்றியுள்ளது.
மந்தமான வளர்ச்சி
செப்டம்பர் மாதத்தில் சேவை துறை மந்தமான வளர்ச்சியைப் பதவி செய்த காரணத்தால் ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் இத்துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைவாகவே உருவாக்கப்பட்டு உள்ளது பெரும் பாதிப்பாகப் பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்புகள்
ஆகஸ்ட் மாதம் சேவை துறையில் கடந்த 14 வருடத்தில் இல்லாத அளவிற்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
CMIE தரவுகள் படி செப்டம்பர் மாதம் நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவு 6.43 சதவீதம், இது ஆகஸ்ட் மாதத்தில் 8.28 சதவீதமாக இருந்தது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை அளவு 4.1 சதவீதமாக இருந்தது.
பணவீக்கம்
மேலும் இக்காலக்கட்டத்தில் நாட்டின் பணவீக்கமும் ஆகஸ்ட் மாத அளவிற்குத் தான் இருந்தது, ஆயினும் சேவை துறையில் பதிவான சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
உற்பத்தி துறை PMI
இதேபோல் உற்பத்தி துறை PMI குறியீட்டின் அளவு ஆகஸ்ட் மாதத்தில் 58.2 சதவீதமாக இருந்த நிலையில் செப்டம்பர் மாதம் 55.1 சதவீதமாக இருந்தது. இது தொடர்ந்தால் இந்தியாவும் சர்வதேச பொருளாதார மந்த நிலையில் மாட்டிக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.


Click it and Unblock the Notifications