டாடா டிரஸ்ட்ஸ் வைத்த கோரிக்கை.. படாரென நோ சொன்ன நீதிமன்றம்.. சோகத்தில் நோயல் டாடா!

டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் மறுநியமனம் செய்யப்பட்டது நாளுக்கு நாள் பெரிய பிரச்சனையாக வெடித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று டாடா டிரஸ்ட்ஸ் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சந்திரசேகரனின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதைத் தாண்டி, நவம்பர் 30ஆம் தேதி நடக்கும் டாடா சன்ஸ் போர்டு மீட்டிங் நடப்பதிற்கு தடை விதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

டாடா டிரஸ்ட்ஸ் வைத்த கோரிக்கை.. படாரென நோ சொன்ன நீதிமன்றம்.. சோகத்தில் நோயல் டாடா!

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மும்பை உயர் நீதிமன்றம் எவ்விதமான தயக்கமுமின்றி நிராகரித்தது. இதன் மூலம் நோயல் டாடா தலைமையிலான டாடா டிர்ஸ்ட் அமைப்பிற்கு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ள டாடா சன்ஸ் இயக்குநர் குழுக் கூட்டத்தை ஒத்திவைக்கவோ, தடை விதிக்கவோ எவ்விதமான வாய்ப்பும் இல்லாமல் போனது.

இதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனம் திட்டமிட்டபடி நவம்பர் 30ஆம் தேதி கூட்டத்தை நடத்தலாம். இக்கூட்டத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் ஐபிஓ வெளியிடுவது குறித்த முடிவுகளை எடுக்கலாம் என்பதால் டாடா டிரஸ்ட் இக்கூட்டத்தை நடத்த தடை கோரியது.

இந்த வழக்கின் விசாரணையில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான டாடா டிரஸ்ட்ஸ், சந்திரசேகரனை மீண்டும் தலைவராக நியமிக்க, டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் இருக்கும் தங்களது இரண்டு இயக்குநர்களின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த 2 இயக்குநர்களில் டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடாவும் ஒருவர். மேலும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் உள்நிர்வாக விதிமுறைகளின்படி இரு தலைவர்களிடம் ஒப்புதல் பெற்று இருப்பது அவசியம், இதேபோல் இந்த விதிமுறை கடந்த 100 ஆண்டுகளாக டாடா குழுமத்தில் இருந்து வருகிறது என நீதிமன்றத்தில் டாடா டிரஸ்ட்ஸின் வாதம் செய்தது.

டாடா குழுமத்தை கட்டுப்படுத்தும் டாடா டிரஸ்ட் அமைப்பின் கீழ் கிட்டத்தட்ட 7 டிரஸ்ட்கள் உள்ளது. ஆனால் இதில் சார் தோராப்ஜி டாடா டிரஸ்ட், ஆர்டி டாடா டிரஸ்ட் ஆகிய இரண்டு அறக்கட்டளைகள் தான் பெரும் பங்கு வைத்துள்ளது.

மேலும் டாடா டிரஸ்ட்ஸ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, நவம்பர் 30ஆம் தேதி டாடா சன்ஸ் நிர்வாக குழு கூட்டத்தை நடத்த ஒப்புதல் அளித்தால் நோயல் டாடாவின் உரிமைகள் மதிக்கப்படுவதில்லை என்ற தவறான கருத்து உருவாகலாம் தெரிவித்தார். ஆனாலும் நீதிமன்றம் இதற்கு அனுமதிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+