டெல்லி: கடந்த வாரத்தில் சிறந்த 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 2,03,063.21 கோடி ரூபாயாகும். இதில் மிகப்பெரிய முக்கிய பங்கு வகித்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான்.
இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச் டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், கோட்டக் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஐடிசி உள்ளிட்ட வங்கிகளும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.
எனினும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், பார்தி ஏர்டெல், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சந்தை மூலதனத்தில் சற்று இழப்பினையும் சந்தித்துள்ளன.
ரிலையன்ஸ் தான் டாப்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகத்தின் கணிசமான பங்கினை அமேசான் வாங்க உள்ளதாகவும், இது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்ட நிலையில் இதன் பங்கு விலையானது கடந்த வாரத்தில் ஏற்றம் கண்டது. இந்த நிலையில் இதன் சந்தை மதிப்பானது 1,48,880.91 கோடி ரூபாய் அதிகரித்து 1,3,60,562.99 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
சந்தை மூலதனம்
ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் 18,135.35 கோடி ரூபாய் அதிகரித்து, 2,47,291.59 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஹெச் டிஎஃப்சி வங்கி 10,788.4 கோடி ரூபாயாக அதிகரித்து, 6,14,252.37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 7,935.1 கோடி ரூபாய் சந்தை மதிப்பானது, 3,92,962.68 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கியின் மூலதனம்
இதே ஐடிசியின் சந்தை மதிப்பானது 7,006.57 கோடி ரூபாய் அதிகரித்து, 2,45,475.86 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஹெச்டிஎஃப்சியின் சந்தை மூலதனம் 6,042.45 கோடி ரூபாய் அதிகரித்து, 3,19,332.15 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கோட்டக் மகேந்திரா வங்கி 4,254.43 கோடி ரூபாய் அதிகரித்து, 2,67,118.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
டிசிஎஸ் சந்தை மூலதனம்
இதே ஹெச்யுஎல் சந்தை மதிப்பானது 29,040.44 கோடி ரூபாய் குறைந்து, 5,19,191.82 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 16,623.07 கோடி ரூபாய் குறைந்து, 8,09,408 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. பார்தி ஏர்டெல் 4,118.95 கோடி ரூபாய் குறைந்து, 3,05,402.10 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த வாரத்தின் சென்செக்ஸ் 1,108.76 புள்ளிகள் அல்லது 2.99% ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications