கொரோனாவை தொடர்ந்து பனி-யால் மீண்டும் அமெரிக்கத் தொழிற்துறை முடங்கியுள்ளது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றுக் காரணமாக உலகில் பிற நாடுகளைப் போல் அமெரிக்காவின் தொழிற்துறை மற்றும் வர்த்தகச் சந்தை முடங்கியது, ஆனால் தற்போது பனியின் காரணமாக அமெரிக்காவில் மீண்டும் பல நிறுவனங்கள் முழுமையாக இயங்க முடியாமல் முடங்கியுள்ளது.

 

அமெரிக்காவில் பல பகுதிகளில் இந்த வருடம் பனி பொழிவு மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகம் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெட்எக்ஸ், ஜெனரல் மோட்டாஸ் எனப் பல முன்னணி நிறுவனங்கள் முடங்கியுள்ளது.

கடும் பனி

கடும் பனி

வட அமெரிக்காவின் தெற்கு பகுதியில் எப்போதும் இல்லாத வகையில் deep freeze நிலை உருவாக்கியுள்ளது. இதற்கு ஏற்றார் போர் அதிபர் நாள் காரணமாக 3 நாள் தொடர் விடுமுறை காரணமாக மின்சாரம் மற்றும் எரிவாயு இல்லாமல் பல கோடி மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஜெனரல் மோட்டார்ஸ்

ஜெனரல் மோட்டார்ஸ்

இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் ஸ்பிரிங் ஹில், டென்னசி, பவுலிங் க்ரீன், கென்டக்கி; ஃபோர்ட் வேய்ன், இந்தியான; மற்றும் ஆர்லிங்டன், டெக்சாஸ் ஆகிய தொழிற்சாலையில் முதல் ஷிப்ட்-ஐ ரத்து செய்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகம்.

உற்பத்தி மற்றும் வர்த்தகப் பாதிப்பு
 

உற்பத்தி மற்றும் வர்த்தகப் பாதிப்பு

இந்தத் தொழிற்சாலைகளில் தான் ஜெனர்ல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் லாபகரமான சில்வரடோ மற்றும் எஸ்கலேட் ஆகிய கார்களைத் தயாரிக்கப்படுகிறது. இந்தப் பனி பிரச்சனையின் காரணமாகப் பல இந்நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் கணிசமாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டோயோட்டா மற்றும் நிஸ்ஸான்

டோயோட்டா மற்றும் நிஸ்ஸான்

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தைப் போலவே ஜப்பான் நாட்டின் டோயோட்டா மோட்டார்ஸ், நிஸ்ஸான் மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் முதல் ஷிப்ட் உற்பத்தி பணிகளைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

ஜீப் மற்றும் போர்டு

ஜீப் மற்றும் போர்டு

மேலும் ஜீப் பிராண்டின் உற்பத்தி நிறுவனமான Stellantis ஓஹியோவில் இருக்கும் டோலென்டோ உற்பத்தி தொழிற்சாலையில் மொத்த உற்பத்தி பணிகளையும் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் போர்டு நிறுவனம் பிப்ரவரி 21 வரையிலும் உற்பத்தி பணிகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.

யூபிஎஸ் மற்றும் பெட்எக்ஸ்

யூபிஎஸ் மற்றும் பெட்எக்ஸ்

மேலும் அமெரிக்காவின் முன்னணி பார்சல் மற்றும் டெலிவரி சேவை நிறுவனமான யூபிஎஸ் மற்றும் பெட்எக்ஸ் ஆகிய நிறுவனத்தின் சேவைகளும் இந்தப் பனி காரணமாகப் பாதித்துள்ளதாகவும், சில பகுதிகளில் முழுமையாக முடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: usa அமெரிக்கா
English summary

Several US companies stalled due to bone-chilling weather

Several US companies stalled due to bone-chilling weather
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X