நாம எல்லோருக்கும் பிடித்தமான ஒரு ஆசை அல்லது விருப்பம் இருக்கும். அதாவது பயணம் செய்வது, குறிப்பிட்ட பொருளை வாங்கி சேகரிப்பது, வித்தியாசமான உணவுகளை ருசிப்பது என பல விதமான ஆசைகள் இருக்கும்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கானுக்கும் ஒரு ஆசை இருக்கு, இது கொஞ்சம் காஸ்ட்லியான ஆசைதான். அவர் ஒரு கார் பிரியர். அவர் வீட்டில் ஏராளமான விலையுயர்ந்த கார்கள் நிற்கின்றன. தற்போது ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் காரான ஐயோனிக் 5 எஸ்.யு.வி. காரை அவர் வாங்கியுள்ளார். இது ஹூண்டாய் ஐயோனிக் 5-ன் 1,100வது வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஷாரூக்கான் வீட்டில் உள்ள கார் சேகரிப்புகளில், இந்தியாவின் விலையுயர்ந்த எஸ்.யு.வி. வாகனமான ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜூம் அடங்கும். தற்போது ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் வாகனத்தை வாங்கியுள்ளார்.
இதுதான் அவரது வாகன கலெக்ஷனில் உள்ள முதல் எலக்ட்ரிக் வாகனம். இந்த காரின் சராசரி எக்ஸ்ஷோரூம் விலை ரூ.45.95 லட்சம். நடிகர் ஷாரூக்கான பல ஆண்டுகளாக ஹூண்டாய் கார்களின் பிராண்ட் தூதராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஷாரூக்கான் கூறுகையில், இது எனது முதல் எலக்ட்ரிக் வாகனம், மேலும் இது ஹூண்டாய் பிராண்ட் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சயடைகிறேன். ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த எலக்ட்ரிக் வாகனம் மார்வெல் அதன் எதிர்பார்ப்புகளை தாண்டி இந்த ஆண்டு 1000 கார்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளது என்பது நம்ப முடியாதது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா குடும்பத்தின் மூத்த உறுப்பினராக இருப்பதால், எங்களின் 25 ஆண்டு கால பயணம் எனக்கும், பிராண்டுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று தெரிவித்தார்.
ஆட்டோ எக்ஸ்போ 2023ல் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் காரான ஐயோனிக் 5 எஸ்.யு.வி. வாகனம் நடிகர் ஷாருக்கானால் வெளியிடப்பட்டது. ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் வாகனத்தில் 72.6 kWh பேட்டரியுடன் 2WD உள்ளது. இது 214.5 பி.எச். பவரையும், 350 என்.எம். டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.
இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 631 கி.மீ. தூரம் பயணிக்க முடியும். இந்த கார் இரட்டை காக்பிட்டுடன் வருகிறது. அதில், 12-இன்ச் புல் டச் இன் இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் ஹூட்லெஸ் 12 இன்ச் டிஜிட்டல் கேஜ் கிளஸ்டர் ஆகியவை டிரைவரின் தேவையை பூர்த்தி செய்ய மாற்றிக்கொள்ளலாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications