மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையில் செல்வந்தர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பல்லி ஹில் பகுதியில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை பல கோடி ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
நடிகர் ஷாருக்கான் மும்பையின் பல்லி ஹில் பகுதியில் இருக்கும் இரண்டு டியூப்லெக்ஸ் அப்பார்ட்மெண்டுகளை வாடகைக்கு எடுத்திருப்பதாக Zapkey என்ற அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 14ஆம் தேதி இந்த வீடு வாடகை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானதாக அந்த தகவல் கூறுகிறது. மும்பையின் பல்லி ஹில் பகுதியில் உள்ள கார் என்ற இடத்தில் இருக்கும் பூஜா காசா என்ற ஆடம்பர குடியிருப்பு பகுதியில் தான் இந்த இரண்டு வீடுகளும் இருக்கின்றன.
இரண்டு டியூப்லெக்ஸ் அபார்ட்மெண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு 24.15 லட்சம் ரூபாய் என ஒரு ஆண்டுக்கு 2.9 கோடி ரூபாய்க்கு இவர் வாடகையாக செலுத்த இருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 36 மாதங்களுக்கு இந்த வாடகை ஒப்பந்தம் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியிடமிருந்து இந்த இரண்டு குடியிருப்புகளையும் ஷாருக்கான் வாடகைக்கு எடுத்திருக்கிறார்.

நடிகர் ஷாருக்கானும் அவரது மனைவி கௌரி கானும் மும்பையில் பாந்த்ரா பகுதியில் மன்னத் என்ற மிகப்பெரிய மாளிகையில் வசித்து வருகின்றனர். ஷாருக்கான் பொருத்தவரை அண்மையில் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் டங்கி படத்தில் தோன்றியிருந்தார். தற்போது இவர் சுஜய் ரோஷனின் இயக்கத்தில் கிங் படத்தில் நடிக்கிறார். தன்னுடைய மகள் சுகானா கானுடன் முதன்முறையாக இணைந்து ஷாருக்கான் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாரன் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் 7,300 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டிருக்கிறார். இவருடைய திரைப்படங்களை தாண்டி இவருக்கு இவருடைய ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் மூலம் பெருமளவிலான லாபம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர இவர் ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் என்ற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் மன்னத் என்ற பெயரில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய மாளிகை இவருக்கு சொந்தமாக இருக்கிறது. இது தவிர லண்டன் , துபாய் , டெல்லி ஆகிய நகரங்களிலும் இவர் சொந்தமாக குடியிருப்புகளை வைத்திருக்கிறார். பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ், போன்ற பல்வேறு ஆடம்பர கார்களையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications