சென்னை: பலருக்கும் நடிகர் நடிகைகளின் சம்பளம், அவர்களுடைய காஸ்ட்லியான உடை, ஹேண்ட் பேக் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். அதிலும் ஒரு குறிப்பிட்ட நடிகர் நடிகையுடைய ரசிகர்களாக இருந்தால் இன்னும் சற்று கூடுதலாக அவர்களுடைய சுய விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சிலர் யோசிப்பார்கள். இது போன்ற நபர்களுக்காகத்தான் இந்த பதிவு.
ஃபோர்ப்ஸ் (based on imdb data) வெளியிட்ட பட்டியலின்படி ஷாருக்கான், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், அல்லு அர்ஜுன், கமல்ஹாசன் ஆகியோர் 2024-இல் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 நடிகர்களின் வரிசையில் உள்ளனர். இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் சொத்து மதிப்பைப் பற்றிப் பார்ப்போம்.

பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா மற்றும் அர்ஜுன் ரெட்டி போன்ற படங்களின் வெற்றிகள் திரையுலகத்தையே புரட்டிப் போட்டன. இதன் காரணமாக தென்னிந்திய நடிகர்கள் தொழில்துறையில் அதிக வருமானம் ஈட்டுபவர்களாக உருவெடுத்துள்ளார். உண்மையில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 இந்திய நடிகர்கள் பெரும்பாலும் தென்னிந்தியத் திரைப்படத் துறைகளைச் சேர்ந்தவர்கள். அவர்களின் சொத்து மதிப்பின் அடிப்படையில் முதல் 10 நடிகர்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ஷாருக் கான் (Shah Rukh Khan): இவருடைய தோராயமான நிகர சொத்து மதிப்பு ரூ. 6300 கோடி. "கிங் கான்" என்ற செல்லப்பெயரால் அறியப்படும் ஷாருக் கான், சமீப காலங்களில் "ஜவான்" மற்றும் "பதான்" போன்ற வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் உலகளவில் ரூ. 2000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன. தற்போது "டங்கி" படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம், பாலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற இடத்தை ஷாருக் கான் பிடித்துள்ளார்.
சல்மான் கான்: இவருடைய தோராயமான நிகர சொத்து மதிப்பு ரூ. 2900 கோடி ரூபாய். இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சல்மான் கான் இருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது டைகர் 3 திரைப்படம், உலகம் முழுவதும் ரூ.466.63 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
அக்சய் குமார்: இவருடைய தோராய நிகர சொத்து மதிப்பு ரூ. 2500 கோடி. அக்சய் குமார் தனது நகைச்சுவை வேடங்கள் மற்றும் சமூக அக்கறையுள்ள படங்களுக்காக பிரபலமானவர். 2023-ஆம் ஆண்டில் பெரிய வெற்றிகள் இல்லை என்றாலும், அவர் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்த OMG 2, உலகம் முழுவதும் ரூ.221 கோடி வசூலித்தது.
அமீர்கான்: இவருடைய நிகர சொத்து மதிப்பு ரூ.1862 கோடி. மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் என்று அழைக்கப்படும் அமீர் கான், திரைப்படத் தயாரிப்பில் அவரது உன்னிப்பான அணுகுமுறைக்காக பேசப்பட்டவர். லால் சிங் சத்தா சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், தங்கல் மற்றும் பிகே போன்ற வெற்றிகளைத் தொடர்ந்து அதிக சம்பளம் பெரும் பிரபலாமாக உள்ளார்.
ஜோசப் விஜய்: இவருடைய தோராயமான நிகர சொத்து மதிப்பு ரூ. 474 கோடி ரூபாய். தென்னிந்தியாவின் மற்றொரு முன்னணி நடிகரான தளபதி விஜய், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர். அவரது 2023 திரைப்படங்களான, வாரிசு மற்றும் லியோ, உலகளவில் ரூ.300 கோடி மற்றும் ரூ.612 கோடி வசூலித்தது, லியோ அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாகும்.
ரஜினிகாந்த்: இவருடைய தோராயமான நிகர சொத்து மதிப்பு ரூ. 430 கோடி ரூபாய். தென்னிந்தியாவில் போற்றப்படும் நபரான ரஜினிகாந்த், மிகுந்த மரியாதையையும் பாராட்டுக்களையும் பெற்றவர். சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் படம் ரூ. 110 கோடி ரூபாய் வசூல் செய்தது.
அல்லு அர்ஜுன்: இவருடைய தோராயமான நிகர மதிப்பு ரூ. 350 கோடி. அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.
பிரபாஸ்: இவருடைய தோராயமான நிகர மதிப்பு ரூ.241 கோடி. பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்றார். ஆதிபுருஷ் மீதான சர்ச்சைகள் இருந்தபோதிலும், அவரது சமீபத்திய படமான சலார், உள்நாட்டில் ரூ. 369.37 கோடிகளை வசூலித்து, ரஜினிகாந்தின் ஜெயிலரின் வருவாயை மிஞ்சியது.
அஜித் குமார்: இவருடைய தோராயமான நிகர மதிப்பு ரூ. 196 கோடி. மற்றொரு முன்னணி தென்னிந்திய நடிகரான அஜித் குமார், 2023 ஆம் ஆண்டு வெளியான துணிவு திரைப்படத்தின் மூலம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தார், இது இந்தியாவில் ரூ.130 கோடி வசூல் சாதனையை எட்டியது.
கமல்ஹாசன்: இவருடைய தோராயமான நிகர மதிப்பு ரூ.150 கோடி, கமல்ஹாசன், சுமார் 220 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications