ஷாருக் கான் முதல் தோனி வரை.. ஆட்டிப்படைக்கும் நியூமராலஜி மோகம்!

பதான், ஜவான் போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தந்த நடிகர் ஷாரூக் கான் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் நடித்த டன்கி படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில் இந்தியக் குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக தேர்வு செய்யும் தவறான பாதைகள் பற்றிய பின்னணியில் இந்தப் படம் உருவாகிறது.

இதில் டாப்ஸி பன்னு, போமன் இராணி, விக்கி கௌஷல் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.ரிலீஸான முதல் நாளிலேயே 30 கோடி ரூபாயை டன்கி வசூலித்தது.

ஷாருக் கான் முதல் தோனி வரை.. ஆட்டிப்படைக்கும் நியூமராலஜி மோகம்!

மும்பையில் உள்ள கேலக்ஸி மூவி தியேட்டரில் அதிகாலை 5.55 மணிக்கு முதல் ஷோ திரையிடப்பட்டது. இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் ஷாரூக் கானின் அதிர்ஷ்ட எண் 555.

ஷாரூக் கான் மட்டுமல்ல, பாலிவுட் மற்றும் கிரிக்கெட் பிரபலங்களுமான விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், ரண்பீர் கபூர், கரீனா கபூர் போன்றவர்களும் இதுபோன்று நியூமராலஜி மோகத்தால் ஆட்டிப் படைக்கப்படுகின்றனர்.

தங்களது ஜெர்சி எண், வாகன பிளேட் நம்பர்கள், சினிமா ரிலீஸ் தேதி, முதல் ஷோ திரையிடும் நேரம் என பல்வேறு விஷயங்களிலும் தங்களுக்கு அதிர்ஷ்டமான எண்கள் இருக்குமாறு அவர்கள் பார்த்துக் கொள்கின்றனர். அதுபற்றி விவரமாக இனி பார்க்கலாம்.

ஷாரூக் கான்: 555 மற்றும் 40 ஆகிய இரு எண்கள் மீது ஷாரூக் கான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். அவரது கார் நம்பர் பிளேட்கள், இமெயில் ஐடி, மொபைல் எண் போன்று தாம் பயன்படுத்தும் எல்லா விஷயங்களிலும் இந்த இரு அதிர்ஷ்ட எண்கள் இருப்பதை உறுதி செய்து கொள்கிறார்.

ரண்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்: ரண்பீர் கபூருக்கு 8 அதிர்ஷ்ட எண்ணாம். கெட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என்பார்கள். ஆனால் ரண்பீர் கபூர் விஷயத்தில் அது தலைகீழாக உள்ளது வேடிக்கைதான்.

இது ஒன்றும் குருட்டு நம்பிக்கை இல்லை. எனது தாயார் பிறந்தநாள் ஜூலை 8. அந்த எண்ணைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கும். அவ்வளவுதான் என்கிறார் ரண்பீர்.

அவரது மனைவி நடிகை ஆலியா பட்டுக்கும் 8 என்றால் மிகவும் இஷ்டமாம். இருவரும் விரைவில் 8 என்ற எண்ணை டாட்டூ குத்திக் கொள்ளப்போகிறார்களாம்.

எம்எஸ் தோனி: 2023 டிசம்பரில் இந்திய கிரிக்கெட் வாரியம் அணியின் ஜெர்சியில் 7ஆம் நம்பரைப் பயன்படுத்துவதை நிறுத்தப் போவதாக அறிவித்தது. இதை தோனி பயன்படுத்தி வந்தார். சச்சின் டெண்டுல்கருக்கு பின்னர் தோனிக்குத் தான் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இப்படிப்பட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஜூலை 7 ஆம் தேதி தான் தோனி பிறந்த நாள். அண்மையில் தோனி ஓட்டிச் சென்ற அவரது கருப்பு நிற மெர்ஸிடஸ் காரின் நம்பர் பிளேட்டில் 0007 என்ற எண் இருந்தது. அந்தக் காரின் விலை ரூ.3.30 கோடி.

சஞ்சய் தத்: நியூமராலஜியில் மிகுந்த நம்பிக்கை கொண்ட மற்றொரு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். 9 தான் அவரது அதிர்ஷ்ட எண். அவரது கார்கள் எல்லாம் 4545 என்ற நம்பர் பிளேட்டைக் கொண்டிருக்கும்.

இருப்பினும் 2022இல் அவர் வாங்கிய புதிய காரில் 2999 என்ற நம்பர் இருந்தது. இது ஒரு ஜோதிடர் சொன்ன அட்வைஸ்படி வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சச்சின் டெண்டுல்கர்: கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தபோது சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சியில் எந்தவொரு எண்ணும் இல்லை.
பின்னர் அவர் 99 என்ற எண் கொண்ட ஜெர்சியை அணிந்து வந்தார். அதன்பிறகு 10 என்ற எண் கொண்ட ஜெர்சியைத்தான் சச்சின் அணிந்திருப்பார். வெற்றி மற்றும் வல்லமையை பிரதிபலிப்பதாக நம்பர் 10 இருப்பதாக சச்சின் கூறுவார்.

கரீனா கபூர் மற்றும் சைப் அலி கான்: கரீனாவுக்கு 3 தான் அதிஷ்ர்டமான எண்ணாகும். எனது எல்லா கார் நம்பரிகளின் கூட்டுப்படை மூன்றாக இருக்கும் என்று கரீனாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நான் 21ஆம் தேதியில் பிறந்தேன். எனக்கு அந்த நம்பர் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கரீனா கூறியுள்ளார்.

அவரது கணவர் சைப் அலி கானின் அதிர்ஷ்ட எண் 7 என்று கரீனா கூறுகிறார். கானின் கார் நம்பர்களின் கூட்டுப்படை ஏழாக இருக்குமாம். அவரது பிறந்த தேதி ஆகஸ்ட் 16.

விராட் கோலி: கிரிக்கெட் உலகில் அதிக சம்பளம் பெறும் வீரராக இருக்கும் விராட் கோலியின் ஜெர்சி எண் 18. ஐபிஎல்லில் கூட இதே எண் கொண்ட ஜெர்சியைத் தான் விராட் கோலி அணிந்திருப்பார்.
அந்த எண்ணை நான் கேட்டு வாங்கவில்லை. அண்டர் 19 அணிக்காக முதலில் விளையாடத் தொடங்கியதில் இருந்து இந்த நம்பர் ஜெர்சியைத் தான் பயன்படுத்துகிறேன் என்கிறார் கோலி.

எனது பிறந்த நாள் டிசம்பர் 18. 18ஆம் தேதியில் எனது வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள் நடந்துள்ளன என்றும் கூறுகிறார் கோலி. அவர் நடத்தும் பிரபல ரெஸ்டாரண்ட் செயினான ஒன்8 கம்யூனின் பெயர்கூட இதன் அடிப்படையில்தான் வைக்கப்பட்டதாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+