சொத்து வாங்கிய விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய கௌரி கான், தற்போது வீட்டை அலங்கரிக்கும் ஆடம்பர பொருட்களை ஆன்லைனிஸ் விற்பனை செய்து வருகிறார் அவைகளின் விலை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி டிசைனர்களில் ஒருவராக கௌரி கான் இருக்கிறார். வீடு வடிவமைக்கும் துறையில், பல்வேறு பாலிவுட் பிரபலங்களில் துவங்கி பிரபலமாக இருக்கும் ஆசிய தொழிலதிபர்களின் வீடுகளை வித்தியாசமாக டிசைன் செய்து தனக்கென ஒரு இடத்தை இந்திய டிசைன் உலகில் பெற்று இருக்கிறார் ஷாருக் கான் மனைவி கௌரி கான்.
கணவர் சினிமா துறையில் கிங் காங்காக இருந்தாலும் கௌரி கான் சற்றும் தொடர்பில்லாத டிசைனர் துறையில் தனக்கென தனிப் பெயரை உருவாக்கியுள்ளது மூலம் அவரின் திறமையை அது காட்டுகிறது.
கௌரி கான்
டிசைன் மட்டுமின்றி தான் வாங்கும் பொருட்கள் மற்றும் அவற்றின் விலை விவகாரங்களில் கௌரி கான் பலமுறை பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். லக்னோவில் சொத்து வாங்கும் விவகாரம் தொடர்பாக மும்பையை சேர்ந்த ஜஸ்வந்த் ஷா, கௌரி கானை எதிர்த்து தாக்கல் செய்திருக்கும் புகாரில் கௌரி மீது FIR பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
கௌரி கான் டிசைன்ஸ்
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மக்கள் இவரது நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அதிக விலை கொண்டிருப்பதை சுட்டிக் காட்டி கேலி செய்ய துவங்கியுள்ளனர். "கௌரி கான் டிசைன்ஸ்" எனும் பெயரில் தனக்கான சொந்த ஹோம் டெக்கர் நிறுவனத்தை 2013 ஆண்டிலேயே துவங்கினார் கௌரி கான்.
ஆடம்பர சந்தை
சாதாரணமாக கட்டப்பட்ட வீடுகளை ஆடம்பர இல்லமாக மாற்றும் பொருட்கள் அனைத்தும் நிறைந்த ஒரே இடமாக கௌரி கான் டிசைன்ஸ் உள்ளது. இந்த நிறுவனம் பழங்கால பொருட்கள், பிரத்யேக வடிவமைப்பு மற்றும் கவர்ச்சிகர தோற்றம் கொண்ட பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றது.
சாமானிய மக்களுக்கு வெறுப்பு
பணக்காரர்கள் மத்தியில் கௌரி கான் டிசைன்ஸ் முக்கிய விற்பனை இடமாக இருந்தாலும், சாமானிய மக்கள் இதை பார்க்கும் போது பதற வைக்கிறது. இது மட்டும் அல்லாமல் தற்போது கௌரி கான் டிசைன்ஸ் பொருட்களை நெட்டிசன்கள் மோசமாக கேலி செய்து வருகின்றனர்.
குப்பை தொட்டி
கௌரி கான் டிசைன்ஸ் வடிவமைத்த குப்பை தொட்டி ஒன்று 15,340 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதை இணையவாசிகள் கேலி செய்ய துவங்கியுள்ளனர். ஷெல் மேஜை விளக்கின் விலை 1,59,300 ரூபாயாகும். இந்த பொருட்கள் அனைத்தும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.
நெட்டிசன் கமெண்ட்
கௌரி கான் பொருட்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலைகள் குறித்து பலர் கமெண்ட் செய்துள்ளனர். ஒருவர், "இதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் இந்த டிசைன்களும் அழகாகவும் இல்லை," என கமெண்ட் செய்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications