இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான சக்தி காந்த தாஸ் பிரதமர் நரேந்திர மோடியின் பிரின்சிபல் செக்ரெட்டரியாக (2) நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய தேர்வுக்கு அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதலும் வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை அப்பாயின்மென்ட் கமிட்டி ஆஃப் தி கேபினேட் (DoPT) சனிக்கிழமையன்று பிறப்பித்தது. 2019 ஆம் ஆண்டின் செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் பி.கே மிஸ்ரா பிரதமரின் பிரின்சிபல் செக்ரட்டரியாக (1) இருந்து வருகிறார். DoPT-யின் உத்தரவின்படி சக்தி காந்த தாஸின் நியமனம் பிரதமரின் பதவி காலத்துடன் இணைந்து அல்லது மறு உத்தரவு வரும் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சக்தி காந்த தாஸ் 2018-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பேற்றார். அப்போது மூன்று வருட காலத்திற்கு கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவின் மத்திய வங்கியான ஆர்பிஐயின் தலைவராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கோவிட்-19 தொற்று போன்ற உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் ரஷ்ய உக்ரைன் போர் உட்பட பல்வேறு சவால்களை எதிர்கொண்டவர் இவர்.

சக்தி காந்த தாஸை ஆர்பிஐ-இன் கவர்னராக நியமித்தபோது பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். டிபிஎஸ் பேங்க்-இன் மார்க்கெட்டிங் ஹெட் ஆஷிஷ் வைத்யா ஐஏஎஸ் பின்னணி கொண்ட முந்தைய ஆளுநர்களான ஒய். வேணுகோபால் ரெட்டி மற்றும் துவ்வூரி சுப்பாராவ் வெற்றிகரமாக தங்கள் பொறுப்பை நிர்வகித்ததாகவும், தாஸும் அதே போன்ற நல்லுறவை அரசாங்கத்துடன் வளர்ப்பார் என்றும் பாராட்டினார். அதற்கு ஏற்ப தனது பதவிக்காலம் முழுவதும் திறம்பட செயல்பட்டார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகத் துறைகளில் அவருக்கு பரந்த அனுபவம் உள்ளது. நிதி, வரிவிதிப்பு, தொழில், உள்கட்டமைப்பு போன்ற தொழில்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
இளமை காலம்: புவனேஸ்வரில் பிறந்த சக்தி காந்த தாஸ் டெமான்ஸ்ட்ரேஷன் மல்டி பர்ப்பஸ் ஸ்கூலில் கல்வி பயின்றார். பின்னர் டெல்லியில் உள்ள சயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பிஏ மற்றும் எம்ஏ பட்டம் பெற்றார். 2021-ஆம் ஆண்டில் உத்கல் பல்கலைக்கழகத்தால் அவருக்கு லிட்ரேச்சர் பட்டம் வழங்கப்பட்டது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications