ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் சக்திகாந்த தாஸ் தனது பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, தனது கடைசி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பில், கடந்த ஆறு ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் மற்றும் சவால்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார்.
2018 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் பொறுப்பை ஏற்றதிலிருந்து, வங்கியின் சுதந்திரம் மற்றும் தொழில்முறை தன்மையை நிலைநிறுத்துவதில் தாஸ் கவனம் செலுத்தியுள்ளார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், வங்கித் துறையை நவீனப்படுத்துதல் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவை அவரது முக்கிய நோக்கங்களாக இருந்தன.

சக்திகாந்த தாஸ் கடைசி செய்தியாளர் சந்திப்பு:
இவ்வளவு குறுகிய நேரத்தில் இங்கு வந்ததற்கு அனைவருக்கும் நன்றி. கடந்த வருடங்களாக நீங்கள் ரிசர்வ் வங்கிக்கும், எனக்கும் பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறீர்கள் - சக்திகாந்த தாஸ்
நான் ரிசர்வ் வங்கியில் சேர்ந்த நாளே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினேன், வெளியேறும்போதும், பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பது சரியானதாக இருக்கும் என நினைத்தேன், இதன் அடிப்படையில் தான் உங்களை இங்கு அழைத்தேன் - சக்திகாந்த தாஸ்
டிசம்பர் 12, 2018 பத்திரிகையாளர் சந்திப்பில், ரிசர்வ் வங்கி ஒரு சிறந்த நிறுவனம் மற்றும் பாரம்பரியம் நிறைந்தது என்று கூறினேன். வங்கியின் தொழில்முறை மற்றும் சுயாட்சியை நிலைநிறுத்த எல்லாவற்றையும் செய்வேன் என்று நான் கூறினேன்.
2018 இல் வங்கித் துறையில் உள்ள சவால்கள், பணப்புழக்கம், பணவீக்க இலக்கு குறித்து அதிகம் விமர்சனம் செய்யப்பட்டுப் பேசப்பட்டது.
கடந்த 6 ஆண்டுகளில், இந்தக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதே எனது முக்கிய முயற்சியாக இருந்தது. நாங்கள் பரந்த அளவிலான ஆலோசனைகளைத் தொடர்ந்து நடத்தினோம்.
இந்த 6 வருடத்தில் பலரை நேருக்கு நேர் சந்தித்துள்ளோம், ஒயிட் பேப்பர்களை வெளியிட்டு உள்ளோம் என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
பணவீக்கம், சைபர் செக்யூரிட்டி போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளோம், கடந்த 6 ஆண்டுகளில் எங்கள் கவனம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம் என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
CBDC மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது, உண்மையில், இது நாணயத்தின் எதிர்காலம் எனவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி இடையேயான ஒருங்கிணைப்பு, கடந்த 6 ஆண்டுகளில் சிறந்த முறையில் இருந்தது எனவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி மத்தியில் சிறந்த ஒருங்கிணைப்பு இருந்தது, கோவிட்க்கு முன்னும், பின்னும், அதற்குப் பின்னரும், பணவீக்கத்தைச் சுற்றியுள்ள சவால்களை ஒன்றாகச் சந்தித்தோம் என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் புதிய பொறுப்பாளர் சஞ்சய் மல்ஹோத்ராவுக்கு பரந்த அனுபவம் உள்ளது, அவர் தன்னால் முடிந்ததைக் கட்டாயம் செய்வார் என்று நான் நம்புகிறேன் என இன்று ஆர்பிஐ கவர்னராக பதவி விலகும் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications