இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கடந்த மாதம் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதே, பதவி நீட்டிப்பை மறுப்பதற்கான தான் இப்படி செய்கிறார் என தகவல் கசிந்தது. ஆனால் எதிர்பார்த்த படியே சக்திகாந்த தாஸ்-க்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு அளிக்கவில்லை, இதனால் இப்பதவியில் மத்திய நிதியமைச்சகத்தில் வருவாய் பிரிவு செயலாளராக இருந்த சஞ்சய் மல்ஹோத்ரா 26வது ஆர்பிஐ கவர்னராக நேற்று நியமிக்கப்பட்டார்.
இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்த தாஸ் பதவி வகிக்கும் இறுதி நாள் என்பதால் முக்கியமான செய்திகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தரப்பில் இருந்து ரெப்போ விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று கடுமையான நிர்ப்பந்தம் எழுந்தது. குறிப்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் ரெப்போ விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த சக்திகாந்த தாஸ் நாட்டின் பணவீக்கம், சாமானிய மக்களின் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தைக் குறைக்க மறுத்து, தனது இருமாத நாணய கொள்கையில் சிஆர்ஆர் விகிதத்தை மட்டும் 4.5 சதவீதத்தில் இருந்து 4.0 சதவீதமாகக் குறைத்தார்.
இதனை தொடர்ந்து பிரதமர் அலுவலகம் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக மத்திய நிதியமைச்சகத்தில் வருவாய் பிரிவு செயலாளராக இருந்த சஞ்சய் மல்ஹோத்ரா-வை நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சக்திகாந்த தாஸ் டிவிட்டரில் 5 பதவிகளை வெளியிட்டுள்ளார். இதில் முதல் பதிவில் இன்று ஆர்பிஐ கர்வனர் பதவியில் இருந்து வெளியேறுகிறேன், அனைவரின் ஒத்துழைப்பும், வாழ்த்துக்களுக்கும் நன்றி என துவங்கிய இப்பதிவில், ஆர்பிஐ கவர்னராக 6 வருடம் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி, தொடர்ந்து எனக்கு பல வகையில் உறுதுணையாக இருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்-க்கு நன்றி, 6 வருடத்தில் பல சவாலான சூழ்நிலையை இணைந்து சமாளித்தோம் என தெரிவித்தார் சக்திகாந்த தாஸ்.
கிடைசியாக ரிசர்வ் வங்கியின் பணியாற்றும் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி, உலகளாவிய மோசமான காலகட்டத்தில் வெற்றிகரமாக நாட்டின் பொருளாதார பாதிப்புகளை தாண்டி வளர்ச்சி பாதைக்கு இணைந்து இந்தியாவை திருப்பினோம். ஆர்பிஐ மற்றும் ஆர்பிஐ நிர்வாகம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
டிசம்பர் 12, 2018ல் ஆர்பிஐ கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேல் திடிரென ஆர்பிஐ கர்வனர் பதவியில் இருந்து வெளியேறிய பின்பு நாட்டின் பொருளாதாரத்தையும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு சக்திகாந்த தாஸ்-க்கு வந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications