ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்-ன் பதவிக்காலம் டிசம்பரில் முடிவடைய உள்ள நிலையில், அவருடைய பதவிகாலம் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் நேற்று சக்திகாந்த தாஸ் அசிடிட்டி பிரச்சனையை எதிர்கொண்ட காரணத்தால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார், இவரின் உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணிப்பு செய்வதாக ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.
சக்திகாந்த தாஸ் முதல் முறையாக ஆர்பிஐ கவர்னராக பதவியேற்றிய பின்பு 2வது முறையாகப் பதவி நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிந்த நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறது. அடுத்த மாதம் இவருடைய பதவிக் காலம் முடிய உள்ள நிலையில் ஏற்கனவே இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும்.

ஆனால் மகாராஷ்டிரா - ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில், தேர்தல் விதிமுறைக்காக மத்திய அரசு எந்தொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதே காரணத்தால் தான் மத்திய அரசு இந்த வாரத்தின் துவக்கத்தில் கிட்டத்தட்ட 9 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தான் சக்திகாந்த தாஸை ரிசர்வ் வங்கி கவர்னராக மீண்டும் நியமிக்கும் செயல்முறையைத் தாமதமாக்கியுள்ளது.
நவம்பர் 23-ம் தேதி இரு மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநரை நியமிப்பது தொடர்பான இறுதி முடிவுகள் அடுத்த ஒரு வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை தற்போது பிரதமர் அலுவலகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அமைச்சரவையின் நியமனக் குழு செயல்படுத்தி வருகிறது.
மேலும் இந்த பதவி நீட்டிப்பில் சக்திகாந்த தாஸ்-க்கு முழு மூன்றாண்டு பதவிக்காலம் கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவரது தற்போதைய பதவிக்காலம் டிசம்பர் 12 ஆம் தேதி முடிவடைந்த பிறகு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பதவியில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என அரசு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications