இந்தியாவின் விமான சேவைத் துறையில் புதிய அத்தியாயம் பிறக்கிறது, நாட்டில் நாளுக்கு நாள் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் இதேவேளையில் பிராந்திய விமான சேவைகளும், பயணிகளும் அதிகரித்து வருகிறது. இந்த சந்தையில் பெரிய விமான நிறுவனங்களால் சேவை அளிக்க முடியாத காரணத்தால் சிறிய மற்றும் புது விமான நிறுவனங்கள் இந்த இடத்தை பிடிக்க முயற்சிக்கிறது.
இதன் அடிப்படையில் மத்திய இந்திய நகரங்களுக்கு மத்தியில் விமான சேவை அளிக்க ஷங்க் ஏர் என்ற புதிய நிறுவனம், விமான சேவை அளிக்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்றுள்ளது. இருப்பினும், விமான சேவை துறையிடம் (DGCA) ஒப்புதலைப் பெற்ற பின்னரே விமான சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க முடியும்.

மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ள ஷங்க் ஏர் (Shankh Air) நிறுவனம், விரைவில் தனது விமான சேவைகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கிழக்கு இந்திய நகரங்களுக்கு மத்தியில் விமான சேவை அளிக்க ஒரு நிறுவனம் உருவானது போல் மத்திய இந்திய பகுதிகளுக்காக ஷங்க் ஏர் உருவாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்ட ஷங்க் ஏர், லக்னோ மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் இருந்து தனது விமான சேவைகளைத் தொடங்கும். இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், ஷங்க் ஏர் பல்வேறு புதிய விமானப் பாதைகளை அறிமுகப்படுத்தும் எனத் தெரிகிறது. குறிப்பாக, இதுவரை நேரடி விமான சேவை இல்லாத பகுதிகளுக்கும் இணைப்பை ஏற்படுத்தும்.
இந்தியாவின் விமானத் துறை கடந்த சில ஆண்டுகளாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவையான இண்டிகோ, தற்போது 60% க்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.
இதையடுத்து, ஏர் இந்தியா தனது சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது. விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா இந்தியா போன்ற விமான சேவைகளை இணைப்பது மூலம் தனது சேவையை மேம்பட்ட முறையிலும், மலிவான விலையிலும் அளிக்க முடியும் என ஏர் இந்தியா நம்புகிறது.
இந்த போட்டி மிகுந்த சூழலில் ஷங்க் ஏரின் வருகை, உள்நாட்டு விமான பயணிகளுக்கு கூடுதலான விருப்பங்களை வழங்கி சந்தையில் போட்டித்தன்மையை அதிகரிக்கும். குறிப்பாக, உத்தரப் பிரதேசம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஷங்க் ஏர், தனது சேவைகளைத் தொடங்கும் போது, பாதுகாப்பு மற்றும் பயணிகளின் வசதி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம், இந்திய விமானத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.
ஷங்க் ஏரின் வருகை, இந்தியாவின் விமானத் துறையில் புதிய போட்டியை ஏற்படுத்தும். இது, பயணிகளுக்கு பல நன்மைகளைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஷங்க் ஏர் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் வாழ்த்துக்கள்!
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications